பாக்தாத்: 16 இடங்களில் குண்டுவெடிப்பு-பலர் பலி
பாக்தாத்:ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 16 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் பலர் பலியானதாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்பால்பாக்தாத் நகர் முழுவதும் ஒரே புகை மண்டலமாக இருக்கிறது.
சதாம் உசேன் தூக்கில் போடப்பட்டதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள்வன்முறையில் குதித்துள்ளனர். சதாம் தூக்கில் போடப்பட்ட சில மணி நேரத்தில் ஷியாபிரிவினர் அதிகம் வசிக்கும் குஃபா நகரில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 60க்கும்மேற்பட்டோர் பலியாயினர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மத்திய பாக்தாத்தில் அடுத்தடுத்து 16 குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இதனால் பாக்தாத் நகரமே கலங்கிப் போனது. இந்தகுண்டுவெடிப்பு குறித்து இதுவரை விரிவான தகவல் ஏதும் இல்லை.
அடுத்தடுத்து நடந்த இந்த குண்டுவெடிப்பால் பல கார்கள், கட்டடங்கள் தீப்பிடித்துஎரிந்தன. நகரமே புகை மண்டலமாக காணப்பட்டது. குண்டு வெடிப்புடன், ராக்கெட்மற்றும் ஏவுகணைத் தாக்குதலும் நடந்துள்ளது.
இந்த சம்பவங்களில் ஏராளமான பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சாவு எண்ணிக்கை மற்றும் சேத விவரத்தை ஈராக் அரசு வெளியிடவில்லை.
பாங்காக் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி
இதற்கிடையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்லாந்து தலைநகர் பாங்காக், அடுத்தடுத்துநடந்த ஆறு குண்டுவெடிப்புகளால் அதிர்ந்து போனது. இதில் 2 பேர் பலியானார்கள். பல வெளிநாட்டினர் இதில்படுகாயமடைந்தனர்.
நேற்று இரவு பாங்காக் நகரம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க பாங்காக் வாசிகளும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் குவிந்திருந்தனர். கொண்டாட்டங்கள் களை கட்ட ஆரம்பித்திருந்தன.
இந்த நிலையில், சென்டிரல் வேர்ல்டு பிளாசா என்ற இடத்தில் உள்ள வர்த்தக வளாகப் பகுதியில் அடுத்தடுத்துஇரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தன.
இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கிருந்து தப்பிஓடினர். இதில் ஒரு வெளிநாட்டுப் பயணி துண்டிக்கப்பட்ட காலுடன் ஓடியதைக் காண முடிந்தது.
இந்த இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானார்கள். இதேபோல கோவா சரான் உள்ளிட்டஇடங்களிலும் அடுத்தடுத்து நான்கு குண்டுவெடிப்புகள் நடந்தன. இந்த குண்டுவெடிப்புகள் புத்தாண்டு பிறந்தஅடுத்த அரை மணி நேரத்தில் நடந்தன.
குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தை பாங்காக் போலீஸார் ரத்து செய்யஉத்தரவிட்டனர். போலீஸாருடன், ராணுவத்தினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.
தாய் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் தனி நாடு கோரி போராடி வருகின்றனர்.
தாய்லாந்தில் சில மாதங்களுக்கு முன்புதான் பிரதமர் சினவத்ரா ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியைக்கைப்பற்றியது என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications