காங். கூட்டணியில் மதிமுக தொடரும்: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மதிமுக தொடர்ந்துநீடிக்கும் என வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், திமுககூட்டணியிலிருந்து மதிமுக விலகியவுடன், ஐக்கிய முற்போக்குக்கூட்டணியிலிருந்தும் விலகுவது குறித்து நாங்கள் பரிசீலித்தோம். இதுதொடர்பாகஅறிக்கை விடவும் நாங்கள் தயாராக இருந்தோம்.

நான் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கூட்டணியிலிருந்து விலகுவது தொடர்பாகவிளக்கியபோது, பிரதமர்தான், மதிமுக கூட்டணியிலிருந்து விலக வேண்டாம்.தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிரதமர் கேட்டுக் கொண்டதால்தான் கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்கிறது.அந்த நிலையில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. ஐக்கிய முற்போக்குக்கூட்டணிக் கட்சிகள் கூட்டத்திற்கு மதிமுகவுக்கு தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன.அக்கூட்டங்களில் மதிமுகவும் பங்கேற்றுள்ளது.

மேலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், ஐக்கிய முற்போக்குக்கூட்டணியில் மதிமுக நீடிப்பதால் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதைதெளிவாக கூறியுள்ளார். விலக வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்என்னிடத்தில் கூறியிருக்கிறார்.

சேலத்தில் எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் கூட்டிய கூட்டம்சட்டவிரோதமானதாகும். என்னைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அவர்கள்கூறியுள்ளதும் சட்டவிரோதமானதாகும்.

கட்சி விரோத நடவடிக்கை காரணமாக நீக்கப்பட்ட, பொதுக் குழு உறுப்பினர் 100 பேர்வரைதான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பெரும்பாலான பொதுக்குழுஉறுப்பினர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர்.

சேலம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.அவை அதற்கு உகந்தவையும் அல்ல.

திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் சதித் திட்டத்தை அமல்படுத்தஅவர்கள் முனைந்துள்ளனர். பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டிஅதில் என்னை கட்சியை விட்டு நீக்கி, தாயகத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்.

சேலம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினர்.வெகு சிலரே மதிமுக பொதுக் குழு உறுப்பினர்கள். இது ஒரு தோல்விக் கூட்டம்.

மதிமுகவின் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த கருணாநிதி போட்ட சதித்திட்டத்திற்கு என்னிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன. ஆனால் கருணாநிதியின்முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன.

எனது தலைமையில் மதிமுக கட்டுக்கோப்புடன், வலுவுடன், உறுதியாக உள்ளது.ஜனவரி 10ம் தேதி சென்னையில் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் திட்டமிட்டபடிகூடுகிறது.

மொத்தம் உள்ள 1416 பொதுக்குழு உறுப்பினர்களில் 1300 பேர் என்னுடன்இருப்பதாக எழுத்துப் பூர்வமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். கட்சிக்குவிசுவசாமாக இருப்போம் என அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.

என் மீது செஞ்சி ராமச்சந்திரனும், எல்.கணேசனும் கூறியுள்ள புகார்கள் குறித்து நான்கவலைப்படவில்லை. காரணம் அவை அடிப்படை ஆதாரம் இல்லாதவை.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு தமிழக நலன்களைக் காக்கத்தவறி விட்டது. உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தும் கூட அதைஅமல்படுத்த திமுக அரசு தவறி விட்டது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நேரத்தில் செயல்பட்டிருந்தால், இந்தவிவகாரத்தை மத்திய நீர் வளத்துறை அமைச்சரிடமும், சட்ட அமைச்சரிடமும் பிரதமர்அனுப்பியிருக்க மாட்டார். தனது சுய லாபத்தைக் கருத்தில் கொண்டு தமிழகமக்களுக்குத் துரோகம் செய்து விட்டார் கருணாநிதி.

திதிஅணை விவகாரத்தில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் தமிழக மக்களுக்கு அநீதிஇழைத்து வருகிறார். ஆனால் கடந்த காலத்தில் கேரள முதல்வராக இருந்த உம்மன்சாண்டி இதுபோன்ற ஒரு அராஜக நடவடிக்கைகளை, தமிழக விரோத நடவடிக்கையைஎடுத்ததில்லை என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+