இந்தோனேசிய விமானம் விழுந்து 90 பேர் பலி
ஜகார்தா:இந்தோனேசியாவில் 102 பேருடன் சென்ற பயணிகள் விமானம் தரையில் விழுந்துநொறுங்கியதில் 90 பேர் பலியாயினர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஆடம் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த போயிங்-747 விமானம்இந்தோனேசிய நேரப்படி நேற்று பிற்பகல் 1 மணிக்கு சுராபயா என்ற நகரிலிருந்துஜாவாவில் உள்ள மனேடோ நகருக்குக் கிளம்பியது.
2 மணி நேரத்தில் அந்த விமானம் மனோடோவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால்குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியும் விமானம் வந்து சேரவில்லை.
மேலும், விமான தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் இரு நகரங்களிலும்பரபரப்பு ஏற்பட்டது.
அந்த விமானத்தில் 96 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர். சுலவேசிமாகாணத்தில் உள்ள மமுஜு என்ற வனப்பகுதியின் கடும் புயல் மழையில் அந்தவிமானம் பறந்து கொண்டிருந்தபோது அதற்கும், தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கும்இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் விமானம் என்ன ஆனது என்ற பதட்டம் அதிகரித்தது. மமுஜு காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது அங்கு விமானம் விழுந்துநொறுங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மீட்புக் குழுவினர் விரைந்து சென்று 12 பேரை பலத்த காயங்களுடன் மீட்டனர். மற்ற90 பயணிகளும் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான் இந்தோனேசியாவில் கப்பல் கடலில் மூழ்கி சுமார் 700பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications