கடும் பனி: டெல்லி ஸ்தம்பிப்பு-விமானங்கள் ரத்து
டெல்லி:கடும் பனிப்பொழிவு காரணமாக தலைநகர் டெல்லியில், விமானம், ரயில் மற்றும்சாலைப் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிரில் வருபவர்கூட தெரியாத அளவுக்கு மிகக் கடுமையாக பனிப்பொழிவு இருப்பதால் மக்களின்இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
![]() |
டெல்லியில் வழக்கமாக அக்டோபர் மாதத்தில் பனிப்பொழிவு தொடங்கும். ஆனால்இந்த ஆண்டு டிசம்பரில் தான் பனிப்பொழிவு தொடங்கியது. மேலும் வழக்கத்தைவிட மிக அதிகமாகவும் பனி கொட்டி வருகிறது.
இதனால் விமானப் போக்குவரத்துதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. முற்பகல்12 மணி வரை பனி விலகாமல் உள்ளதால் விமானங்கள் புறப்படுவதும், வருவதும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
![]() |
இந் நிலையில் இன்று காலை பனி மூட்டம் மிக அதிகமாக இருந்ததால் டெல்லிக்குவரும் விமானங்கள் அனைத்தும் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுவருகின்றன.
சென்னையிலிருந்து டெல்லி செல்லும் பெரும்பாலான விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. ரன்வேயில் 50 மீட்டர் தொலைவுக்குத்தான் பார்வைத் திறன்உள்ளது என்பதால் விமானங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
![]() |
இதேபோல ரயில் போக்குவரத்தும் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2வதுநாளாக இன்றும் ரயில்கள் அனைத்தும் பல மணி நேரம் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
இதேபோல சாலைப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. சாலையில் எதிரில் வருபவர்கூட தெரியாத அளவுக்கு தெரியாத அளவுக்கு இருப்பதால் வாகனங்கள் அனைத்தும்நத்தை வேத்தில் ஊர்ந்து வருகின்றன.
![]() |
கடும் பனியுடன், குளிரும் அதிகமாக இருப்பதால் மக்கள் கூட்டத்தை சாலையில்பார்க்க முடியவில்லை. பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர்அலுவலகத்திற்குப் போவோர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
டெல்லியைப் போலவே உ.பி. மாநிலம் அலகாபாத்திலும் கடும் பனிப்பொழிவுகாணப்படுகிறது. பெரும்பாலான வட மாநிலங்களிலும் இதே நிலைதான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்
















Click it and Unblock the Notifications