ராணுவ வீரர்கள் ரகளை: காவல் நிலையம் சூறை
கொல்கத்தா:பெண்ணைக் கேலி செய்த 2 ராணுவ அதிகாரிகளை போலீஸார் விசாரணைக்குஅழைத்துச் சென்றதால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர்கள், கொல்கத்தா காவல்நிலையத்திற்குள் புகுந்து போலீஸாரை சரமாரியாகத் தாக்கி, காவல் நிலையத்தைசூறையாடி, கைது செய்யப்பட்ட அதிகாரிகளை விடுவித்து அழைத்துச் சென்றனர்.
கொல்கத்தாவின் பார்க் தெருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம்நள்ளிரவில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. அப்போதுராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமன்ட் பிரிவைச் சேர்ந்த கேப்டன் மகேஷ், மேஜர்சி.பி.சிங் ஆகியோர் குடிபோதையில் அங்கிருந்த பெண்களிடம் தவறாக நடக்கமுயற்சித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து ஒரு பெண் பார்க் தெரு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையம் கொண்டு சென்றனர்.
இதை அறிந்த ராணுவ வீரர்கள், 3 டிரக்குகளில் காவல் நிலையம் விரைந்தனர்.அனைவரும் ராணுவ சீருடையில் இருந்தனர். காவல் நிலையத்திற்குள் புகுந்தஅவர்கள் அங்கிருந்த காவலர்களை சரமாரியாக அடித்தனர். பொருடகளை தூக்கிப்போட்டு வீசி சூறையாடினர்.
மேசை, நாற்காலிகளை உடைத்தனர். தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துகருவிகளை உடைத்தனர். பின்னர் போலீஸாரை துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி இருஅதிகாரிகளையும் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு லாக்கப்பில்அடைக்கப்பட்டிருந்த 6 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
ராணுவ வீரர்களின் தாக்குதலில் 11 போலீஸார் காயமடைந்தனர். இதில் ஒருவர்படுகாயமடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்தாக்குதல் குறித்து துணை ஆணையர் குல்தீப் சிங் கூறுகையில், ராணுவ வீரர்கள்ஹோட்டலிலும் தாக்குதல் நடத்தி 6 ஊழியர்களைக் காயப்படுத்தியுள்ளனர். அவர்கள்மீது கலவரம் செய்தது, தாக்குதல் நடசத்தியது, கைது செய்யப்பட்டவர்களைவலுக்கட்டாயமாக கடத்திச் சென்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்கு கிழக்குப் பிராந்திய ராணுவத் தலைமையகம் விசாரணைக்குஉத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தை தாங்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டிருப்பதாகராணுவம் விளக்கம் தந்துள்ளது.
மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் ஏ.கே. தேவ் கூறுகையில், இந்த செயல்அதிர்ச்சி தருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.
இதற்கிடையே, ராணுவ வீரர்களால் விடுவிக்கப்பட்ட இரு அதிகாரிகளில் ஒருவரானசி.பி.சிங் பின்னர் காவல் நிலையத்திற்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டார். அவரிடம்இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, போலீஸாருடன் ஆலோசனை நடத்தநான் வந்துள்ளேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications