அணையின் சுவரை உடைத்து கேரளா விஷமம்:மத்திய படை பாதுகாப்பு கோரும் கருணாநிதி
தேனி:முல்லைப் பெரியாறு அணையின் கைப்பிடிச் சுவரில் 6 அடி நீளத்திற்குசேதமடைந்துள்ளது. விஷமிகள் சிலர்தான் அணையின் சுவரை இடிக்கும் நோக்கில்இந்த வேலையை செய்துள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த விடமாட்டோம் என கேரள அரசு உடும்பப் பிடியாக இருந்து வருகிறது. உச்சநீதிமன்றம்சொல்லியும் அது கேட்க மறுத்து வரட்டுப் பிடிவாதமாக இருந்து வருகிறது.
![]() |
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் கைப் பிடிச் சுவரை சில விஷமிகள்சேதப்படுத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இதைபொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்த்துள்ளனர். 6 அடி நீளம், 1.5 அடி அகலத்திற்குசுவர் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அணையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீஸாரிடம் தமிழகபொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்துக் கேட்டதற்கு எங்களுக்குத் தெரியாதுஎன்று மிகவும் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு 12 போலீஸார் (அத்தனை பேரும் கேரள போலீஸார்) பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் யாருமே சுவரை சேதப்படுத்தியவர்களைபார்க்கவில்லையாம்.
அணையின் சுவர் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை உடனடியாக பணியில் இருந்தபொதுப்பணித்துறை ஊழியர்கள், மதுரையில் உள்ள தலைமைப் பொறியாளர்அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து மதுரை பிராந்திய தலைமைப் பொறியாளர் ஆர்.வி.எஸ்.விஜயக்குமார்கூறுகையில் சில விஷமிகள்தான் இதை செய்துள்ளனர் என சந்தேகிக்கிறோம்.
இரும்புக் கம்பியால் கைப் பிடிச் சுவரின் உட்பகுதியை சேதப்படுத்தியுள்னர். இதன்மூலம் அணை பலவீனமாக இருப்பதாக காட்டிக் கொள்ள அவர்கள் நினைக்கின்றனர்.
இந்த சுவர் 1984ம் ஆண்டு கட்டப்பட்டது. மிகவும் உறுதியாக உள்ளது. அணை சுவர்சேதப்படுத்தப்பட்டது குறித்து நமது ஊழியர்கள் அங்கிருந்த கேரள போலீஸாரிடம்கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தை தமிழகஅரசுக்குத் தெரிவித்துள்ளோம்.
அணை உள்ள பகுதி யாரும் உள்ளே வர அனுமதி இல்லாத ஒரு இடம். அணை உள்ளபகுதிக்கு வர வேண்டுமானால் படகிலோ அல்லது கேரள வனத்துறைக்குச்சொந்தமான சாலையிலோதான் வர முடியும். இதை மீறி யார் நுழைந்தால் அவர்களைத்தடுக்க வேண்டியது கேரள அரசின் பொறுப்பு.
அவர்களை மீறி யாரும் உள்ளே வர முடியாது. எனவே கேரள போலீஸாருக்குத்தெரியாமல் சுவர் உடைப்பு நடந்திருக்க முடியாது. அணையின் முக்கியச் சுவரில்சேதம் ஏற்பட்டுள்ளது. கேரள போலீஸாருக்குத் தெரியாமல் யார் வந்து இதைச்செய்திருக்க முடியும்? என்றார் அவர்.
கேரளாவைச் சேர்ந்த விஷமிகள் சிலர் போலீஸாரின் உதவியுடன் இதைச் செய்திருக்கவேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் போலீஸார்தான் இதைச் செய்திருக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள்.
பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழகத்திற்குத் அடி பணிந்து விடக் கூடாது. ஒருசொட்டு நீர் கூட கூடுதலாகப் போய் விடக் கூடாது என கேரள அரசு அத்தனைதகிடுத்தங்களையும் செய்து வருகிறது.
முதலில் பெரியாறு அணை உடைவது போல கிராபிக்ஸ் சிடியை புழக்கத்தில் விட்டுசொந்த மாநில மக்களையே பீதிக்குள்ளாக்கியது. தமிழக அரசு இதை கடுமையாகஎச்சரித்ததால் விட்டது. ஆனால் கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்இந்த கிராபிக்ஸ் காட்சிகளை இடம்பெறச் செய்துள்ளது.
தற்போது அணையை உடைக்கும் அளவுக்கு கேரள அரசு துணிந்து விட்டது, தமிழகமக்கள் மீது அம்மாநிலத்திற்கு உள்ள துவேஷ உணர்வையே வெளிப்படுத்துவதாகஉள்ளதாக கருதப்படுகிறது.
அணை சேதம்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணை சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முல்லைப் பெரியாறு அணையின் கைப்பிடிச் சுவர் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் முதல்வர்கருணாநிதியின் கவனத்திற்குச் சென்றது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோசுக்கும் அவர் அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், முல்லைப் பெரியாறு அணையின் முழுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் சதி: வீரமணி
அணையின் சுவர் உடைக்கப்பட்டதில் சதி அடங்கியுள்ளது. இது கேரள போலீசாருக்குத் தெரியாமல் நடந்திருக்காது. எனவே முதலில் அணையின் பாதுகாப்பைமத்தியப் படைகளிடம் பிரதமர் ஒப்படைக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications