கேரளத்தின் அநாகரீகம்-ராமதாஸ் தாக்கு
சென்னை:பெரியாறு அணையில் கைப்பிடி சுவர் சேதப்படுத்தப்பட்டதற்கு கேரள அரசு தான் முழுப் பொறுப்பேற்கவேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேரள மாநில காவல் துறையின் கண்காணிப்பில் இருந்து வரும் பெரியாறு அணையின் கைப்பிடிச்சுவர்சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இது கேரளக் காவல்துறையினருக்குத் தெரியமால் நடைபெற்றிருக்கு முடியாது.எனவே இந்த நாசவேலைக்கு கேரள அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற எடுத்துச் சொல்லியும், பல ஆய்வுகள் நடத்திய பின்பும், அணை உடைந்து விடும் என்றுஇணையதளத்தின் மூலமும், குறும் படங்களின் மூலமும் மக்கள் மத்தியில் புரளியைக் கிளப்பி வருகிறார்கள்.
கேரள முதல்வர் அச்சுதானந்தனும் பெரியாறு அணை பழுதடைந்து இருக்கிறது என்று தொடர்ந்து கூறிவருகிறார்.அணை பாதுக்காப்பற்றது என்பதற்கும், அது உடைந்து விடும் என்பதற்கும் தகுந்த ஆதாரங்களைத் தர முடியாதநிலையில் இப்பொழுது அணையின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்தித் தங்களது பொய் பிரசாரத்திற்கு வலிமைசேர்க்க முயற்சி செய்கிறார்கள்.
ஜனநாயகத்தில் எந்த ஒரு அரசும் இத்தகைய அநாகரீக செயலில் ஈடுபாடது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உச்ச நீதிமன்றம் தெரிவித்த ஆலோசனைக்கும், அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கும்மதிப்பளிக்க வேண்டும் என்தற்காகப் பேச்சு வார்த்தையில் பங்கேற்கலாம் என்று நாம் முடிவு செய்தோம்.முதல்வர் மட்டத்திலான பேச்சு வார்த்தையிலும், அமைச்சர் மட்டத்திலான பேச்சுவார்த்தையிலும் எந்தப் பயனும்இல்லை.
இந்நிலையில் கேரள அரசு இத்தகைய குறுக்குச்சால் ஓட்டுகிற வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறது. எனவேஇனி கேரளாவுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா என்பது குறித்து தமிழக அரசுமுடிவெடுத்து செயல்பட வேண்டிய இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது.
வருகிற 5ம் தேதி உச்சநீதமன்றத்தில் அணை விவகாரம் குறித்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போதுமக்களிடையே பீதியை கிளப்பும் நடவடிக்கைகளில் கேரள அரசு தொடரந்து ஈடுபட்டு வருவதை நீதிமன்றத்தின்கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
பேச்சுவார்த்தை என்று சொல்லி சிக்கலுக்கு தீர்வு ஏற்படுவதைத் தாமதப்படுத்த வேண்டும் என்ற குறுகியகண்ணோட்டத்தில் கேரள அரசு நடந்து கொள்வதால் இனி பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை என்பதைநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.
நீதிமன்றம் வழங்கும் இறுதித் தீர்ப்புதான் இச்சிக்கலைத் தீர்க்க உதவும் என்பதை எடுத்து கூறி இறுதித் தீர்ப்பைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தாமதமின்றி மேற்கோள்ள வேண்டும்.
அத்துடன் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளைமத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவாதத்தையும் பெற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications