மரணத்திற்கு முன் அவமானப்படுத்தப்பட்ட சதாம்!
பாக்தாத்:சதாம் உசேனைத் தூக்கில் போடுவதற்கு முன்பு அங்கிருந்த காவலர்கள் சிலர் சதாமை சரமாரியாக திட்டிப்பேசியுள்ளனர். அவர் தூக்கில் போடப்பட்டு இறந்தவுடன், ஒழிந்தான் சர்வாதிகாரி என்றும் ஒருவர் கூச்சல்போட்டுள்ளது புதிதாக வெளியாகியுள்ள வீடியோ படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
சதாம் தூக்கிலிடப்பட்டதன் சில காட்சிகள் முன்பு வெளியாகின. தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படுவது,கழுத்தில் கயிற்றை மாட்டுவது ஆகியவை மட்டுமே முதலில் வெளியிடப்பட்டன. பின்னர் சதாம் பிணமாககிடக்கும் காட்சிகள் வெளியாகின.
![]() |
தற்போது மேலும் சில வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் தூக்கு மேடைக்கு அழைத்து வரப்படும்சதாமுடன் சிலர் சூடான வாக்குவாதத்தில் ஈடுபட்டது இடம்பெற்றுள்ளது. அந்த நபர்கள் சதாமை சரமாரியாகவிமர்சித்து கோபமாக பேசியுள்ளனர். அவர்களை சதாமும் கிண்டலடித்தபடியே வருகிறார்.
செல்போன் கேமரா மூலம் இந்தக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு இணைய தளங்களில் வெளியாகியுள்ளன.சதாம் தூக்கிலிடப்படுவதைப் பார்க்க வந்திருந்தவர்கள், ஷியா பிரிவு தீவிரவாதத் தலைவரும் சதாமின் அரசியல்எதிரியுமான முக்தாதா அல்-சதாரின் பெயரை கூறி அவரை வாழ்த்தி கோஷமிடுகிறார்கள்.
முக்தாதா சார்ந்த அமைப்பினர் சன்னி முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதும் அவர்களுக்கு ஈரான்உதவி வருவதும் குறிப்பிடத்தக்கத்தது.
சதாமை சுற்றி நிற்கும் பாதுகாவலர்கள் முக்தாதா.. முக்தாதா.. முக்தாதா என்று கோஷம் போட, நீங்கள் எல்லாம்ஆம்பிளைகள் தானா என்று கேள்வி கேட்கிறார் சதாம். இதையடுத்து எரிச்சலான அவர்கள் சதாமை திட்டஆரம்பிக்கின்றனர். அவர்களைப் பார்த்து சதாம் சிரிக்கிறார்.
ஒரு நபர் சதாமைப் பார்த்து நீ நரகத்திற்குத்தான் போவாய் என்கிறார். அதற்கு சதாம் தனது புன்முறுவல் மாறாமல்,நீ எந்த நரகத்தை சொல்கிறாய், அமெரிக்கா-இரான் கட்டுப்பாட்டில் உள்ள இப்போதைய இராக் நரகத்தையாஎன்று கேட்கிறார் சதாம்.
மேலும் சிலர் ஈராக்கை நீ நாசமாக்கி விட்டாய், தரித்திரத்தில் தள்ளி விட்டாய், நரகமாக்கி விட்டாய் என்றுஆவேசமாக கூறுகிறார்கள். அதற்கு சதாம் ஏதோ பதில் தருகிறார். அது தெளிவாக கேட்கவில்லை.
![]() |
பின்னர் 1908ம் ஆண்டில் சதாம் படையினரால் கொல்லப்பட்ட முக்தாதா அல் சதாரின் உறவினரான முகம்மதுபக்ருல் அல் சதரை வாழ்த்தி சில கோஷங்கள் இடுவது கேட்கிறது.
பின்னர் சதாம் தூக்கிலிடப்பட்டு அவர் உடல் தொங்கியதும், சர்வாதிகாரி ஒழிந்தான் என்று ஒரு கோஷம்கேட்கிறது. சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு இந்த வீடியோ படம் ஓடுகிறது.
படத்தின் முடிவில், தூக்கில் தொங்கிய நிலையில் சதாமின் உடல் காணப்படுகிறது. அவரது கண்கள் பாதி திறந்தநிலையில் உள்ளன. தலை வலதுபுறமாக திரும்பி கிடக்கிறது.
சிறையில் பறவைகளுக்கு உணவளித்த சதாம்!
சிறையில் இருந்த காலத்தில் சதாம் உசேன் தனக்கு தரப்பட்ட உணவிலிருந்து கொஞ்சம் எடுத்து வைத்துபறவைகளுக்கு இரையாகப் போட்டதாக அவருடைய ஆண் செவிலியர் ராபர்ட் எல்லீஸ் கூறியுள்ளார்.
சதாம் உசேனின் மறைவுக்குப் பிறகு அவருடைய மறுபக்க செய்திகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன.
சதாம் உசேனின் அமெரிக்க படையினரிடம் சிறைப்பட்டிருந்தபோது அவருக்கான செவிலியராக பணியாற்றியவர்ராபர்ட் எல்லீஸ். அமெரிக்கரான இவர் சதாம் சிறையில் இருந்தபோது எப்படி நடந்து கொண்டார் என்பதைவெளியிட்டுள்ளார்.
ராபர்ட் எல்லீஸ் கூறியதாவது: தினமும் இரண்டு முறை நான் சதாமை ப>சோதிப்பேன். தினசரி அவரது உடல்நலம், மன நலம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது.
முதலில் அறைக்குக் கீழே உள்ள துளை வழியாக சாப்பாட்டுத் தட்டை உள்ளே தள்ளி விட்டனர். இதை சதாம்ஏற்கவில்லை. கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்திற்கு சாப்பாடு தருவது போல தனக்கு தருவதை அவர்விரும்பவில்லை.
இதனால், கதவைத் திறந்து உள்ளே போய் சாப்பாடு கொடுத்தனர். அதை அவர் ஏற்றுக் கொண்டார். தனக்குதரப்படும் சாப்பாட்டிலிருந்து சில பகுதிகளை தனியாக அவர் எடுத்து வைப்பார். அவ்வப்போது அவரைவெளியே உலவ விடுவோம்.
அந்த சமயத்தில் தான் எடுத்து வைத்த சாப்பாட்டை பறவைகளுக்கு இரையாக கொடுப்பார். அவைகள்சாப்பிடுவதை ரசித்துப் பார்ப்பார். அங்குள்ள செடிகளுக்கும் அவர் தண்ணீர் ஊற்றுவார்.
அப்போது, நான் சிறு வயதில் விவசாயம் செய்துள்ளேன். அந்த அனுபவம் இன்னும் எனக்குள் உள்ளது என்பார்.
பிறகு தான் சிகரெட் பிடிக்கும்போது என்னையும் புகை பிடிக்குமாறு அன்போடு கூறுவார்.
சிறை அறையில் இருக்கும்போது தனது சிறு வயது கதைகளை அவர் சொல்வார். சிறு வயதில் தான் செய்தசேஷ்டைகளை புன்முறுவலோடு வர்ணிப்பார்.
ஒருமுறை அவரது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டதாம். அப்போது இரவெல்லாம்விழித்திருந்து தனது குழந்தையைப் பார்த்துக் கொண்டாராம்.
எனது சகோதரர் அமெரிக்காவில் இறந்தபோது நான் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள கிளம்பினேன். அதைஅறிந்த அவர் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டு நான் உனது சகோதரன், கவலைப்படாமல் போய் வா என்றுஅன்போடு அனுப்பி வைத்தார். அவரது அன்பு என்னை மிகவும் கலங்கச் செய்து விட்டது.
சாவைப் பற்றி அவர் ஒருபோதும் கவலைப்படதாகவே தெரியவில்லை. சாவு குறித்து யாரிடமும் அவர்பேசியதும் இல்லை. நான் எனது ஆட்சியை தவறாக நடத்தவில்லை. நான் செய்த அனைத்துமே எனது நாட்டுமக்களின் நன்மைக்காகத்தான் என்று கூறிக் கொண்டே இருப்பார் சதாம் என்றார் எல்லீஸ்.














Click it and Unblock the Notifications