கோவில்களில் தமிழில் அர்ச்சனை-வருகிறது சட்டம்
திருச்சி:கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை சட்டப்பூர்வமாக தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. இதற்காக சட்டம் கொண்டு வர அரசு தயாராக உள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெரியகருப்பன்செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனஅறிவித்து அதற்காக நீதிபதி ராஜன் தலைமையில் தனி கமிஷன் அமைத்துநடைமுறைப்படுத்த முதல்வர் கருணாநிதி அரசாணை வெளியிட்டார்.
தற்போது இதுதொடர்பாக தனி சட்டம் கொண்டு வரவும் அரசு தயாராக உள்ளது.
தமிழகம் முழுவதும் அறநிலையத் துறை கோவில்களுக்குச் சொந்தமான 4.75 லட்சம்ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றைப் பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை. கோவில்சொத்துக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவில்களின் வருமானத்தை உயர்த்த புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும்என்றார் பெ>யகருப்பன்.












Click it and Unblock the Notifications