யுஎஸ்சில் இளசுகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
வாஷிங்டன்:ஏராளமான வெளிநாட்டு இளைஞர்கள் அமெரிக்காவில் குடியேறி வருவதால் அந்நாட்டில் வயதானவர்களின்எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இளைஞர்கள் அதிக அளவில் இருப்பது அமெரிக்காவின்பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதாக அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு துறைதெரிவித்துள்ளது.
![]() |
ஜனவரி 1ம் தேதியுடன் அமெரிக்க மக்கள் தொகை 30.1 கோடியை எட்டியுள்ளது.
இதுகுறித்து ப்ரூக்கிங்ஸ் கழகத்தைச் சேர்ந்த மக்களியல் நிபுணர் வில்லியம் பிரே கூறுகையில், அமெரிக்காவில்இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரைபடுத்தப்படுகிறது.சமூகத்திற்கும் இது பல வகைகளில் பேருதவியாக உள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் குடியேறி வருகின்றனர். இதனால்மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 1950ம் ஆண்டிலிருந்து, வருடத்திற்கு 1 சதவீதம் என்ற அளவில் அமெரிக்க மக்கள் தொகை அதிகரித்துவருகிறது. இவர்களில் 40 சதவீதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்றார் பிரே.
அமெரிக்க மக்கள் தொகைத் துறையைப் பொருத்தவரை, அமெரிக்காவில் பிறக்காத அனைவருமேவெளிநாட்டவர்கள் என்றுதான் கருதப்படுகிறது. இவர்களில் அமெரிக்கர்களாக இருந்தும் வெளிநாட்டில் பிறந்துஅமெரிக்க குடிமக்களாக மாறியவர்கள், சட்டப்பூர்வமாக நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள், இடம் பெயர்ந்துவந்தவர்கள், அகதிகள், மாணவர்கள், சட்டவிரோத குடியேறிகள் ஆகியோர் அடங்குவர்.
வளர்ச்சி அடைந்த வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெ>க்காவில் அதிக அளவு வெளிநாட்டவர்கள்குடியேறி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதுதான் முக்கியமானது.
இதனால் உலகிலேயே அதிக அளவில் இளைஞர்கள் விகிதம் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. ஐரோப்பியநாடுகள், ஜப்பான் போன்ற பிற வளர்ச்சி அடைந்த நாடுகளில் வயதானவர்கள்தான் கணிசமாக உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் 65 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 12 சதவீதம் மட்டுமே. இது 2025ம் ஆண்டில்20 சதவீதமாக அதிகரிக்கும் என பிரே கூறுகிறார். ஆனால் தற்போதைய ஜப்பான் மக்கள் தொகையில் 20 சதவீதம்பேர் 65 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் தொகையில் வயதானவர்கள், குறிப்பாக 85 வயதைக் கடந்தவர்கள் அதிகம் இருந்தால், நாட்டின்பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் என்பது பிரேவின் கருத்து.













Click it and Unblock the Notifications