கைகோர்க்கும் விஜயசாந்தி-ராவ்: கட்சிகள் பீதி
ஹைதராபாத்:தல்லி (தனி) தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வரும் நடிகை விஜயசாந்தி,தற்போது சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சியில்இணைகிறார்.
ஆந்திராவின் தெலுங்கானாவைத் தனியாகப் பிரித்து தனி மாநிலம் அமைக்கவேண்டும் என கோரி பல்வேறு அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றன.அதில் முதன்மையான அமைப்பாக தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி (டி.ஆர்.எஸ்)உள்ளது.
![]() |
இக்கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்கட்சியுடன் கூட்டணி அமைத்து எம்.பி. ஆனார். மத்திய அமைச்சராகவும்பதவியேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.
ஆனால் தெலுங்கான மாநிலம் அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் வழங்கியஉறுதிமொழியிலிருந்து அது விலகி விட்டதால் கோபமடைந்த சந்திரசேகரராவ்கூட்டணியிலிருந்து விலகினார், அமைச்சர் பதவி மற்றும் எம்.பி. பதவிகளைராஜினாமா செய்தார்.
பின்னர் தான் ஏற்கனவே போட்டியிட்ட கரீம் நகர் தொகுதியில் மீண்டும்போட்டியிட்டார். இம்மறை அவருக்கு விஜயசாந்தி முழு ஆதரவு கொடுத்தார். தீவிரப்பிரசாரமும் செய்தார். இதனால் கரீம் நகர் தொகுதியில் சந்திரசேகரராவ் அபார வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளர் டெபாசிட் இழந்தார்.
இந்த வெற்றியின் மூலம் தனது செல்வாக்கையும், பலத்தையும் ஸ்திரப்படுத்திக்கொண்ட ராவ் தற்போது தெலுங்கானா கோ>க்கைக்கு வலு சேர்க்கும் வேலையில்தீவிரமாக இறங்கியுள்ளார்.
தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்து போராடி வருபவர்களை ஒருங்கிணைத்துஒரே குரலாக மாற்றும் முயற்சியில் ராவ் தீவிரமாகியுள்ளார். அவரது முயற்சியின்விளைவாக தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்து தனிக் கட்சி நடத்தி வரும்நடிகை விஜயசாந்தி சந்திரசேகரராவ் கட்சியில் இணைய முன்வந்துள்ளார்.
![]() |
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராவ் பேசுகையில், தெலுங்கானா தனி மாநிலம்குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.எங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்த தெலுங்கானாவை ஆத>க்கும் தலைவர்களைஒருங்கிணைத்து வருகிறேன்.
முதலில் தல்லி தெலுங்கான தலைவி விஜயசாந்தியிடம் இதுதொடர்பாகபேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எங்களது கோரிக்கையை ஏற்று டி.ஆர்.எஸ்ஸில் சேரஅவர் முன்வந்துள்ளார்.
நல்கொண்டா, மகபூப் நகர் மாவட்டங்களில் விரைவில் பொதுக் கூட்டங்கள்நடைபெறவுள்ளன. அப்போது மக்கள் முன்னிலையில் விஜயசாந்தி டி.ஆர்.எஸ்ஸில்முறைப்படி இணைகிறார்.
அவர் இணைந்தால் ஆந்திராவின் மிகப் பெரிய கட்சியாக டி.ஆர்.எஸ்.உருவெடுக்கும். இத்ைத தொடர்ந்து மக்களைத் திரட்டி எங்களது போராட்டத்தைத்தீவிரப்படுத்தவுள்ளோம் என்றார்.
ஏற்கனவே மிக பலமாக உள்ள டி.ஆர்.எஸ்சில் விஜய்சாந்தியும் இணைந்தால்கிட்டத்தட்ட 12 மாவட்டங்களில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜக ஆகியவைமரண அடியை சந்திக்கும் என கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications