மருமகனுடன் ஓடிய அத்தை திருந்தினார் !

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:மருமகனுடன் ஓடிய அத்தையை போலீசார் பிடித்து கவுன்சிலங் செய்து அவர் கணவருடன் சேர்த்து வைத்தனர்.

நாகர்கோவில் அருகே கிருஷ்ணன் புதூரைச் சேர்ந்த எஸ்ரா. இவர் மும்பையில் வேலை பார்த்து வந்தபோதுகொல்கத்தாவைச் சேர்ந்த ரீனா என்பருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் நான்கு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மும்பையிலிருந்து கிருஷ்ணன் புதூர் திரும்பியஎஸ்ரா-ரீனா தம்பதி அங்கு வாசித்து வந்தனர்.

ரீனாவுக்குத் தமிழ் தெரியாது என்பதால் தனது அக்காவின் மகன் மனோ சிங்கை தமிழ் கற்றுக் கொடுக்கச்சொன்னார் எஸ்ரா. இதையடுத்து மனோவும் அடிக்கடி வீட்டுக்கு வந்து அத்தைக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டது. இதை அறிந்து எஸ்ரா மனோவையும்,ரீனாவையும் கண்டித்தார்.

இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து எஸ்ரா போலீஸில் புகார் கொடுத்தார்.இதையடுத்து இருவரையும் போலீசார் மதுரையில் வைத்து பிடித்தனர்.

பின்னர் இருரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ரீனா தான் கணவருடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்றுகூறினார்.

அதேபோல மனோ சிங் அத்தையுடன் குடும்பம் நடத்தவும், அவரது நான்கு குழந்தைகளை தனது குழந்தைகளாகஏற்று வாழவும் தயாராக இருப்பதாக மனோ சிங் கூறினார்.

இதையடுத்து போலீசார் இருவருக்கும் மனோதத்துவ கவுன்சிலிங் தர ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் ரீனாதனது கணவருடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ரீனாவையும், எஸ்ராவையும் போலீசார்சேர்ந்து வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+