சிதம்பரம் மாநாட்டில் மயங்கிய விஞ்ஞானிகள்

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கு அடுத்த ஆண்டுகளில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர்மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று 94வது இந்திய அறிவியல் மாநாடு தொடங்கியது. வரும்7ம் தேதி வரை நடக்கும் இம் மாநாட்டில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5,500க்கும் மேற்பட்டவிஞ்ஞானிகள் கலந்து கொண்டுள்ளனர். அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான பொது உரை மற்றும் 20க்கும்மேற்பட்ட ஆய்வு உரைகள் இந்த மாநாட்டில் சமர்பிக்கப்படவுள்ளன.

இஸ்ரேல், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும் மாநாட்டில்பங்கேற்றுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் அறிவியல் மாநாட்டையும், அறிவியல் காண்காட்சியையும்தொடங்கி வைத்து பிரதமர் பேசுகையில், அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கான ஆண்டு செலவு அடுத்த ஐந்துஆண்டுகளில் 1 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக அதிகரிக்கும்.

அறிவியல் கழகங்களை மேம்படுத்தவும், பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் பாடத் திட்டங்களை மேலும்கவர்ச்சிகரமானதாக மாற்றவும் அறிவியல் துறையினர் தயாராக வேண்டும்.

அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அறிவியல் துறையில் அதிக முதலீடுகளை செய்ய அரசு ஆர்வமாக உள்ளது.

அதேபோல, அறிவியல் கழகங்களை மேலும் மேம்படுத்த தேவையான நேரத்தையும், தங்களது அறிவையும்,அறிவியல் சமுதாயமும், விஞ்ஞானிகளும் செலவிட முன்வர வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை விகிதம் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. இது கவலை தருகிறது. அறிவியல் மற்றும் கணிதங்களைப் போதிக்கும் ஆசிரியர்கள், அவற்றைமாணவர்களுக்கு சுலபமாக புரியும் வகையிலும், அவர்கள் விரும்பி படிக்கும் வகையிலும் தங்களது போதனாமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆய்வுகள் குறைந்து வருகின்றன. அதி நவீன அறிவியல் ஆய்வுநிறுவனங்களிலும் இதே நிலை நீடிப்பது கவலை தருகிறது.

பல்கலைக்கழக முறைகளை மாற்றியமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. சர்வதேச அளவிலான தரத்துடன்கூடியதாக நமது ஆய்வகங்கைள மாற்றியமைக்க வேண்டும்.

இங்கிருந்து வெளிநாடுகளுக்குப் போக விரும்பிய காலம் மாறி இப்போது அங்கிருந்து தாயகத்திற்குத் திரும்பத்துடிக்கும் விஞ்ஞானிகள் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்ற பல விஞ்ஞானிகள்இந்தியாவுக்கு உதவ தற்போது முன்வந்தவண்ணம் உள்ளனர்.

இவற்றை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், விசா முறைகள், வேலை வாய்ப்பு முறைகள், ஊதியவிகிதம் உள்ளிட்டவற்றை நாம் மாற்றியமைக்க வேண்டும்.

வனப் பாதுகாப்பு, நிர்வாகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் சேமிப்பில் புதிய முறைகள், மருத்துவ குணம் கொண்டதாவரங்களை பயன்படுத்துவது, கால்நடை தீவண உற்பத்தி ஆகியவற்றில் நாம் அறிவியல், தொழில்நுட்பத்தைஅதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.

விழாவில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் பேசினார். விழாவின்போது, அணுசக்தித் துறை செயலாளர் டாக்டர் அணில் ககோத்கர், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர்ஆர்.சிதம்பரம் உள்ளிட்ட விஞ்ஞானிகளை பிரதமர் மன்மோகன் சிங் கெளரவித்தார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய மன்மோகன் சிங் டெல்லி கிளம்பினார்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வரும் 5ம் தேதி மாநாட்டில் கலந்து கொண்டு 14 பேருக்கு இளம்விஞ்ஞானிகள் விருதுகளை வழங்குகிறார்.

27 பேர் மருத்துவனையில் அனுமதி:

முன்னதாக நேற்றிரவு பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட உணவு விஷமானதால் 3 விஞ்ஞானிகள், பிரதமரின்பாதுகாப்பு அதிகாரிகள், ஒரு ஏடிஎஸ்பி, போலீசார் உள்பட 27 பேருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் ராஜா முத்தையா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+