ராமநாதபுரம் அதிமுக நிர்வாகிகள்-ஜெ அதிரடி
சென்னை:ராமநாதபுர அதிமுக நிர்வாகிகளை கூண்டோடு அதிரடியாக மாற்றம் செய்துள்ளார் அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
பெரும்பாலும் சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர்களே புதிய பொறுப்புக்களைப் பெற்றுள்ளனர்.
இந்த மாவட்டத்தின் புதிய செயலாளராக சுந்தரபாண்டியனும், அவைத் தலைவராக சேகரும், பொருளாளராகசுந்தர்ராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர், ஜெயலலிதா பேரவைசெயலாளர், இளைஞர் அணிச் செயலாளர் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர்.
மகளிர் அணிச் செயலாளராக செளந்தரவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாணவர் அணியில் ஆரம்பித்துதொழிற் சங்க அணி, வழக்கறிஞர் பிரிவு அணி, சிறுபான்மை பிரிவு அணி, விவசாயிகள், மீனவர்கள், மருத்துவர்,இலக்கிய அணிகளுக்கும் பழையவர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
அத்தோடு பொதுக் குழு உறுப்பினர்களையும் மாற்றியுள்ளார் ஜெயலலிதா.
இதே போன்று கூண்டு மாற்றங்கள் இனி அதிரடியாக ஒவ்வொரு மாவட்டமாக அரங்கேறும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications