சென்னை வளர்ச்சிக்கு ரூ.45000 கோடி திட்டம்
சென்னை:சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளை மேம்படுத்த ரூ. 47,000 கோடியில் மிகபிரமாண்டமான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான நிதியுதவியை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அளிக்கும்.
சென்னை நகரம் படு வேகமாக விஸ்தீரணமாகிக் கொண்டிருக்கிறது. தெற்கேசெங்கல்பட்டு வரையிலும், வடக்கே திருவள்ளூர் வரையிலும் சென்னை மாநகரம்பரந்து விரிந்து பரவிக் கொண்டிருக்கிறது.
சென்னை நக>ன் மையப் பகுதியில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் புதிதாகநிலம், வீடு வாங்க விரும்புபவர்கள் நகரை விட்டு பல கிலோமீட்டர் தொலைவுக்குச்சென்றால்தான் கொஞ்சம் சகாய விலையில் தங்களது கனவை அடைய முடிகிறது.
இட நெருக்கடி ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் இடியாப்ப போக்குவரத்துச் சிக்கல்நகர மக்களை நரக வேதனைக்குள்ளாக்கி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டுசென்னை மாநகரையும், ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளையும் இணைத்து மேம்படுத்திபல்வேறு திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்து ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டத்தை படிப்படியாக நிறைவேற்ற தமிழக அரசுமுடிவு செய்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சமீபத்தில்நடந்தது.
இக்கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசின் உள்ளாட்சித்துறை மேம்பாட்டு அமைச்சக இணைச் செயலாளர் ராஜாமணி, தமிழக அரசின்நகராட்சி நிர்வாக, குடிநீர் வழங்கல் துறை செயலாளர் தீனபந்து, சென்னை மாநகராட்சிஆணையர் ராஜேஷ் லகானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
சென்னையைச் சுற்றிலும் சிறு சிறு நகரங்களை நிர்மாணிப்பது. அதில் அனைத்துவசதிகளுடன் கூடிய, சுகாதாரமான குடியிருப்புகளை அமைப்பது. இதற்காக ரூ. 5,000கோடி ஒதுக்கப்படும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி போக்குவரத்து மேம்பாட்டுக்காக ரூ. 17,254 கோடிசெலவிடப்படும். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கப்படும்.
குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு ரூ. 1,321 கோடியும், பாதாள சாக்கடைத் திட்டத்துக்குரூ. 2,300 கோடி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ரூ. 854 கோடி, மழை நீர்வடிகால் திட்டத்துக்கு ரூ. 1,424 கோடியும் ஒதுக்கப்படவுள்ளது.
இதுதவிர துரித ரயில் திட்டத்துக்கு ரூ. 600 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.குடியிருப்பு வசதி, நலிவடைந்த பிரிவினர் வசிக்கும் பகுதி கட்டமைப்புமேம்பாட்டுக்கு ரூ. 3,887 கோடி ஒதுக்கப்படவுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தத்திட்டங்களுக்கு மொத்தம் 45,000 கோடி ரூபாய் செலவாகும் எனமதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மகா திட்டத்துக்கு மத்திய அரசின் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுஅமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது. இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சிநிறைவேற்றவுள்ளது.


Click it and Unblock the Notifications
