தனுஷ்கோடியிடம் நலம் விசாரித்த கருணாநிதி
சென்னை:சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சென்னை அப்பல்லோ மருத்துவனையில்சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனைமருத்துவனை வளாகத்தில் சந்தித்து முதல்வர் கருணாநிதி நலம் விசாரித்தார்.
நெல்லை மக்களவை எம்.பியான தனுஷ்கோடி ஆதித்தன் தூத்துக்குடி அருகேவாகைக்குளத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரது மனைவிசம்பவ இடத்திலேயே பலியானார்.
ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 2 மாதம் சென்னை அப்பல்லோமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனுஷ்கோடி ஆதித்தன் சில மாதங்களுக்குமுன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பின்னர் பிசியோ தெரபி மற்றும் நடைப் பயிற்சிக்காக கடந்த மாதம் மீண்டும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்தஅவர், முதல்வர் கருணாநிதியைக் கண்டதும் அங்கேயே நின்றார்.நெஞ்சு வலியால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர்கோ.சி.மணியைப் பார்க்க வந்திருந்த கருணாநிதி, தனுஷ்கோடியைப் பார்த்ததும்அவரிடம் சென்றார்.
தனுஷ்கோடி ஆதித்தனிடம் ப>வுடன் உடல் நலன் விசா>த்தார் கருணாநிதி. விரைவில்நலம் பெற்றது மகிழ்ச்சி தருகிறது. டாக்டர்கள் சொல்லியபடி நடந்து கொள்ளுங்கள்என்றார் கருணாநிதி.
கருணாநிதியிடம், தான் விபத்தில் சிக்கியதும் சென்னைக்கு உடனடியாக அழைத்து வரதனி விமானத்தை அனுப்பி உதவியதற்கும், தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததற்கும்தனுஷ்கோடி ஆதித்தன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதன் பின்னர் கோ.சி.மணியை பார்த்து நலம் விசாரித்தார் முதல்வர்.
ஸ்டாலினிடம் நலம் விசாரித்த தலைவர்கள்:
இதற்கிடையே முதுகு வலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் ஸ்டாலினை முக்கிய பிரமுகர்கள் சந்தித்து நலம்விசாரித்தனர்.
சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஸ்டாலின். அவரைஅமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மத்தியஅமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கவிஞர் வைரமுத்து,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு, பாஜக எம்பிதிருநாவுக்கரசர் மற்றும் பலர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications