ஜாமீனில் விடுதலை ஆனார் சிவகாசி ஜெயலட்சுமி
திருச்சி:கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவகாசி ஜெயலட்சுமி நேற்று திருச்சிசிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழக காவல்துறையை தனது செயல்களால் கலங்கடித்தவர் ஜெயலட்சுமி. ஏட்டு முதல் எஸ்.பி. வரை 20க்கும்மேற்பட்டோர் மீது சரமாரியாக பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கூறி தென் மாவட்ட காவல்துறைக்ைகு நடுக்கம்கொடுத்தார் ஜெயலட்சுமி.
பின்னர் வேறு சில வழக்குகளின் கீழ் போலீஸார் ஜெயலட்சுமியைக் கைது செய்தனர். டி.எஸ்.பி. மனைவிதற்கொலை வழக்கு, நகை மோசடி வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலட்சுமிதிருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
டி.எஸ்.பி. ராஜசேகரன் மனைவி விசாலாட்சி தற்கொலை வழக்கில் ஜெயலட்சுமிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டது.
இந்த இரு வழக்குகளிலும் ஜெயலட்சுமிக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் அவரது சார்பில் ஜாமீன் கொடுத்தஇருவரை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதையடுத்து வேறு இரண்டு பேரை தேடி வந்தனர்.
அந்த இரண்டு பேரும் கிடைத்ததால் இருவரையும் ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி நேற்று திருச்சிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அவர்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுடன் ஜெயலட்சுமியின் வழக்கறிஞர்கள் திருச்சி சிறைக்கு விரைந்தனர். அங்குஜாமீன் உத்தரவை வழங்கினர். இதைத் தொடர்ந்து ஜெயலட்சுமி விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலட்சுமி. 15 மாதங்களுக்குப்பின்னர் நேற்று விடுதலை ஆனார்.
வெளியே வந்த ஜெயலட்சுமியைப் படம் பிடிக்க பத்திரிக்கையாளர்கள் குழுமியிருந்தனர். ஆனால் அவர்களைப்பார்த்ததும் அங்கிருந்து ஓடிய ஜெயலட்சுமி மறைவான ஒரு இடத்தில் நின்று கொண்டார். பின்னர் சிறைவளாகத்திற்குள் இருந்தபடி ஒரு கால் டாக்சியை வரவழைத்து அதில் ஏறிச் சென்றார்.
ஜெயலட்சுமி மதுரைக்கு செல்வதாக அவரது வழக்கறிஞர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications