ரவிராஜ் கொலை-ஸ்காட்லண்ட் யார்ட் விசாரணை
கொழும்பு:கொழும்பில் கடந்த நவம்பர் மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் எம்.பி. நடராஜாரவிராஜ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ஸ்காட்லாண்ட் யார்ட்போலீஸார் இன்று கொழும்பு வருகின்றனர்.
![]() |
கடந்த நவம்பர் 10ம் தேதி மாவத்தை என்ற இடத்தில் ரவிராஜ் தனதுமெய்க்காவலருடன் வீட்டிலிருந்து காரில் கிளம்பியபோது அடையாளம் தெரியாதசிலர் அவரை வழிமறித்து சுட்டுக் கொன்றனர்.
இலங்கை ராணுவம்தான் அவரை சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து ரவிராஜா கொலை வழக்கில் ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸ் உதவிநாடப்படும் என இலங்கை அரசு அறிவித்தது.
இதையடுத்து ஸ்காட்லாண்ட் போலீஸின் ஐந்து பேர் அடங்கிய குழு இன்று கொழும்புவருகிறது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் எம்.ஏ.ஹசன்கூறுகையில்,
ஐந்து பேர் கொண்ட ஸ்காட்லாண்ட் குழு கொழும்பு வருகிறது. அவர்கள் இலங்கைகுற்றப் புலனாய்வு துறையினருடன் இணைந்து விசாரணைக்கு உதவி புரிவார்கள்என்றார்.
புலிகளின் தளம் மீது இலங்கை தாக்குதல்:
இந் நிலையில் விடுதலைப் புலிகளின் கடற் பிரிவு தளம் மீது இலங்கை விமானப்படை இன்று குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறையினர் கூறுகையில், முல்லைத் தீவு பகுதியில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான கடற்பிரிவு தளம் மீது குண்டு வீசித் தாக்குதல்நடத்தப்பட்டது. இதில் அந்தத் தளம் முழுமையாக சேதமடைந்தது என்றனர்.
கடந்த சில நாட்களாக முல்லைத் தீவு பகுதியில் இலங்கை படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட15 அப்பாவித் தமிழர்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலை உடனடியாக நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு முயல வேண்டும் என ஐ.நா. இரு தரப்பையும் வலியுறுத்தியுள்ளது. ஆனால் இப்போதைக்கு இலங்கைதனது தாக்குதலை நிறுத்துவது போலத் தெரியவில்லை.
இதற்கிடையே, வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி ஒரு ராணுவ வீரர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர். இப்பகுதியில்சாலையோரம் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை ராணுவத்தினர் அகற்றிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications