வைகோ ஒரு லெட்டர் பேட் கட்சி தலைவர்-எல்ஜி
தஞ்சாவூர்:
மதிமுக கரைய ஆரம்பித்து விட்டது. விரைவில் அதன் வரலாறு முடியும். வைகோவின் அரசியல் வாழ்வுக்குமுற்றுப்புள்ளி வைக்கப்படும் என எல்.கணேசன் கூறியுள்ளார்.
போட்டி மதிமுகவின் அவைத் தலைவரான எல்.கணேசன் சொந்த ஊரான தஞ்சையில் செய்தியாளர்களிடம்பேசினார். அப்போது, வைகோவின் பேச்சில் தடுமாற்றம் வர ஆரம்பித்து விட்டது. அச்சம், குழப்பம், அதிர்ச்சிவெளிப்பட ஆரம்பித்து விட்டது.
எங்களது பொதுக்குழுக் கூட்டத்தில் 100 பேர் கூட கலந்து கொள்ளவில்லை என்கிறார். பின்னர் அவரே 70 பேர்கலந்து கொண்ட பொதுக் கூட்டம் என்கிறார். ஒரு சிராய்ப்பு கூட ஏற்படவில்லை என்கிறார்.
அவரை விட்டு விலகி எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கின்ற தொண்டர்களை நிறுத்தி வைக்க,தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார் வைகோ.
மதிமுகவின் வளர்ச்சிக்காக என்னை விட அதிகம் பாடுபட்டவர் ஒருவர் உள்ளார் என்றால் அதுவைகோவாகத்தான் இருக்கும். கட்சிக்காக அத்தனை பேரும் அப்படிப் பாடுபட்டோம்.
வைகோவும் மற்ற 8 பேரும் பொடாவின் கீழ் சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர்களை வெளியே கொண்டுவர நான் எடுத்த முயற்சி நாடறியும். 1 கோடியே 10 லட்சம் கையெழுத்துப் பெற்று அவர்களை விடுதலைசெய்யக் கோரி குடியரசுத் தலைவர், பிரதமரிடம் மனு கொடுத்தோம்.
கலைஞரிடம் முதல் கையெழுத்தைப் பெற்றவன் நான். அவரது ஒரு கையெழுத்து 1 கோடி கையெழுத்துக்குச்சமம் என்றார் வைகோ. கையெழுத்துக்களைப் பெற அதிகம் முயன்றவர் செஞ்சியார். அதிகம் உதவியவர்அண்ணன் கலைஞர்.
இத்தனைக்குப் பிறகும் ஒரு சிராய்ப்பு கூட இல்லை என்கிறார் வைகோ. கட்சி கரைந்து கொண்டிருக்கிறது.மதிமுகவின் வரலாறு விரைவில் முடிந்து விடும். ஆருயிர் வைகோவின் அரசியல் வாழ்வுக்கு விரைவில்முற்றுப்புள்ளி வைக்கப்படும். இனிமேல் அவர் லெட்டர்பேட் கட்சியின் பொதுச் செயலாளராகத்தான் இருப்பார்.
நான் அண்ணாவிடம் படித்தவன், கலைஞரிடம் பயிற்சி பெற்றவன். வன்முறையால் நாங்கள் எதையும் அடையமுயலவில்லை. நான் தலைமை தாங்கினால் மதிமுக, தானே எங்களது கைக்கு வரும். எனவே சட்டப்படியானநடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும். வன்முறையால் எதையும் எட்ட முயல மாட்டோம் என்றார் எல்.கணேசன்.
எம்பி பதவி-ராஜினாமா செய்வீரா?: நாஞ்சில்
இதற்கிடையில் எல்.ஜியும், செஞ்சியும் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயாரா என்று மதிமுககொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் கூறியதாவது,
யாரோ இருவர் விலகி போய் விட்டதால் மதிமுக அழிந்து விடாது. யார் நினைத்தாலும் அழிக்க முடியது.பிளக்கவும் முடியாது. நினைத்தவுடன் அழிப்பதற்கு இது அவசரத்தில் அள்ளி தெளித்த புள்ளி கோலங்களா?
கட்சியை காட்டிக் கொடுத்த எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததைகுற்றச்சாட்டாக கூறுகிறார்கள். இந்த சதியில் பின்னணியே வேறு. கருணாநிதி டெல்லியில் நிருபர்களிடம் மதிமுகஎங்கே இருக்கிறது என்று கேட்டார். இப்போது எல்.கணேசன் பொதுக்குழுவுக்கு 400 பொதுக்குழு உறுப்பினர்கள்கறாராக வந்தார்கள் என்கிறார்.
எல்.கணேசன் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்று கட்சி நண்பர் வேட்டி மாற்றி கட்டியது, சோறு போட்டது முதல்அனைத்தையும் வீடியோ படம் எடுத்து வைத்திருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு வரட்டும், தாக்கல்செய்கிறோம்.
என்னிடம் ரூ. 30 கோடி இருந்தால் வைகோவை விலைக்கு வாங்கி விடுவேன் என்றார் கருணநிதி. யார்நினைத்தாலும் வைகோவை விலைக்கு வாங்க முடியாது. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக், பாமக ஆகிய கட்சிகளைஉடைத்தார்கள். அதிமுகவையும் உடைக்க முயற்சித்தார்கள். இப்போது மதிமுகவையும் உடைக்க முயற்சி செய்துவருகிறார்கள்.
திமுகவில் கருணாநிதியை விட வைகோ செய்த தியாகம் அதிகம். திமுக தொண்டர்கள் மீது எங்களுக்குபகையில்லை. இன்று பொரியார் சந்திக்காத சங்கடங்களையும், அண்ணா சந்திக்காத சவால்களையும் வைகோசந்திக்கிறார்.
எல்.ஜி, செஞ்சிக்கு எம்பி பதவியை கொடுத்தது திமுகவா? அது வைகோ போட்ட பிச்சை. அந்த பதவியைஅவர்கள் ராஜினாமா செய்ய தயாரா? தாயகத்துக்கு வந்து பார் தெரியும். இந்திய ராணுவத்தை வரவழைத்தாலும்வைகோ தொண்டர்கள் எதிர்கொள்வார்கள்.
முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்றால் திமுக எம்பிக்கள்மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என்று செல்ல தயாரா?
பொடா சட்டத்தில் கைதாகி இருந்த வைகோவை வெளியில் கொண்டு வர முதல் கையெழுத்து போட்டதாககருணாநிதி கூறுகிறார். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அன்று வைகோ தயவு தேவைப்பட்டது. அதனால்கையெழுத்து போட்டார்.
வைகோ சிறையில் இருந்த போது நாடாளுமன்ற தேர்தல் தொகுதி உடன்பாட்டில் வைகோவை கேட்காமல் 5தொகுதியை 4 ஆக குறைத்து எழுதிய ஒப்பந்தத்தில் எல்.ஜி கையெழுத்து இட்டார். அப்போதே எல்.ஜி விலைபோய் விட்டார் என்றார் நாஞ்சில்.












Click it and Unblock the Notifications