சுவர் உடைப்பு-கேரள போலீஸில் தமிழகம் புகார்
குமுளி:முல்லைப் பெரியாறு அணையின் கைப்பிடிச் சுவர் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குமுளி காவல்நிலையத்தில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் கைப்பிடிசுவரை சில விஷமிகள் இரும்புக் கம்பிகள் கொண்டு தாக்கிசேதப்படுத்தியுள்ளனர். கேரள போலீஸாரின் பாதுகாப்பில் அணை இருக்கும் நிலையில் இவ்வாறு நடந்திருப்பதுபெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி,ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சுவர் உடைப்பு தொடர்பாக பெரியாறு அணை கண்காணிப்பாளர் சுந்தரராஜன்,பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அய்யப்பன் ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
முதலில் புகார் மனுவை வாங்க அங்கிருந்த இன்ஸ்பெக்டர் மறுத்துள்ளார். வெகு நேரம் தமிழக அதிகாரிகளிடம்புகாரை வாங்காமல் மறுதலித்துள்ளார். இதையடுத்து தமிழக அதிகாரிகள் குமுளி போலீஸாரிடம் கடும்வாக்குவாதம் நடத்தினர்.
பின்னர் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட அந்த இன்ஸ்பெக்டர் பிறகு புகாரைப் பெற்றுக் கொண்டார்.அதன் பின்னர் குமுளி போலீஸார் சேதப்படுத்தப்பட்ட பகுதியை நேரில் பார்த்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் எண்ணிக்கை அதிகரிப்பு:
இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு தற்போதுள்ள போலீஸாரை விட கூடுதல்போலீஸாரை கேரள அரசு அனுப்பியுள்ளது.
இதுவரை 2 பேர் மட்டுமே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். தற்போது மேலும் 10 பேரை பாதுகாப்புப் பணிக்குகேரள அரசு அனுப்பியுள்ளது.
அடுத்து சுப்ரீம் கோர்ட்தான்: துரைமுருகன்
இந் நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இனி உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக பொதுப்பணித்துறையில் தற்போது உள்ள அரதப் பழசான ஜீப்புகளை மாற்றி விட்டு புதிய ஜீப்புகள்ரூ. 1 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன.
இந்த ஜீப்புகளை அந்தந்த கோட்ட அதிகாரிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில்நடந்தது. ஜீப்புகளின் சாவிகளை துரைமுருகன் சம்பந்தப்பட்ட கோட்டஅதிகாரிகளிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 1958ம் ஆண்டு வாங்கப்பட்டஜீப்புகளை மாற்றி விட்டு புதிய ஜீப்புகளை வாங்கியுள்ளோம். (இந்தியா சுதந்திரம்வாங்கியபோது வாங்குனதா?) தேவைப்பட்டால் இன்னும் பல ஜீப்புகளைவாங்குவோம்.
முல்லைப் பெ>யாறு அணையின் கைப் பிடிச் சுவர் இடிக்கப்பட்டது கேரள அரசின்திட்டமிட்ட சதி. இன்று சுவரை இடித்தவர்கள் நாளை என்ன வேண்டுமானாலும்செய்யலாம். எனவேதான் மத்திய போலீஸ் பாதுகாப்பு கோரி பிரதமருக்கு முதல்வர்கடிதம் எழுதியுள்ளார்.
இந்தப் பிரச்சினையில் அடுத்த கட்டமாக உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறுவழியில்லை. இதே கருத்தைத்தான் முதல்வரும் கொண்டுள்ளார் என்றார்துரைமுருகன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications