டெல்லியில் கே.ஆர். நாராயணனுக்கு நினைவிடம்
டெல்லி:டெல்லியில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு நினைவிடம் அமைக்கப்படவுள்ளது.
நாட்டின் முதல் தலித் ஜனாதிபதியான நாராயணன், அரசியல் எல்லைகள் கடந்து அனைவராலும்மதிக்கப்பட்டவர். பண்டிட் நேருவின் அன்பைப் பெற்ற நாராயணன் ஐஎப்எஸ் அதிகாரியாக இருந்துஅரசியலுக்கு வந்தவர்.
பின்னர் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்தபோது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காககுரல் தந்தவர். மத்திய அரசு நீட்டிய எல்லா கோப்புகளிலும் கையெழுத்திடும் ஜனாதிபதியாக இல்லாமல்,தவறுகளை சுட்டிக் காட்டியவர்.
மறைந்த நாராயணனுக்கு அவரது சமாதியிலேயே நினைவிடம் அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்கூடிய இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இந்தப் பணியை மேற்கொள்ளும். நாராயணனின் சமாதி டெல்லியில் முன்னாள்மறைந்த ஜனாதிபதிகள் ஜெயில் சிங், சங்கர் தயாள் சர்மா ஆகியோரின் சமாதிகளுக்கு இடையே அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications