காதலித்த குற்றம் - காது, மூக்கு கட்!
முல்தான்:பாகிஸ்தானில், பழங்குடியினப் பெண்ணை காதலித்துத் திருமணம் செய்த நபரின் காது மற்றும் மூக்குதுண்டிக்கப்பட்டது. தாயாரின் கை வெட்டப்பட்டது. சகோதரருக்கும் காதுகள் துண்டிக்கப்பட்டன.
![]() |
பாகிஸ்தானின் பழங்குடியின கிராமங்களில் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்படும் சம்பவங்கள் சகஜமானது.தினசரி ஒரு கொலை நடக்கும் கிராமங்கள் கூட உள்ளன.
பெண் குடும்பத்தாரின் சம்மதம் இல்லாமல் யாராவது காதலித்துத் திருமணம் செய்தால் அவ்வளவுதான்,மாப்பிள்ளை வீட்டாரின் கதி அதோ கதிதான்.
முல்தான் நகரைச் சேர்ந்த முகம்மது இக்பால் என்பவர் ஷானாஸ் என்ற பழங்குடியினப் பெண்ணைக் காதலித்தார்.இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். காதலை வீட்டில் சொன்னால் சம்மதம் கிடைக்காது,தண்டனைதான் கிடைக்கும் என்பதால் ஷானாஸ் யாருக்கும் தெரியாமல் இக்பாலுடன் அவரது வீட்டிற்குச் சென்றுகல்யாணம் செய்து கொண்டார்.
பின்னர் ஷானாஸின் குடும்பத்திற்குப் பயந்து இக்பால், ஷானாஸ் மற்றும் இக்பாலின் குடும்பத்தினர் வேறுஊருக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக முல்தானுக்குவந்திருந்தனர்.
இவர்கள் வந்ததை அறிந்த ஷானாஸ் சார்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த 15 பேர் பயங்கர ஆயுதங்களுடன்இக்பாலின் வீட்டுக்கு வந்தனர். அப்போது ஷானாஸ் வீட்டில் இல்லை. ஷானாஸை எங்களுடன் திருப்பி அனுப்பிவிடுங்கள் என இக்பாலிடம் அவர்கள் கூறியுள்ளனர். அதற்கு இக்பால் முடியாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த அவர்கள் இக்பாலின் காதுகள், மூக்கு ஆகியவற்றை கத்தியால் அறுத்தனர். பின்னர்இக்பாலின் அண்ணனின் காதுகளும் அறுக்கப்பட்டன. அவர்களது தாயாரின் கைகளையும் வெட்டினர். பின்னர்அக்கும்பல் சென்று விட்டது.
உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து இக்பாலின்அண்ணன் முகம்மது யாசின் கூறுகையில், எங்களை தரையில் இழுத்துப் போட்டு சரமாரியாக அடித்தனர். அதன்பின்னர் காது, மூக்கை அறுத்தனர் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் இதுபோன்றகாரணத்திற்காக ஆண்டுதோறும் 1000 பேர் வரை கொல்லப்படுவதாக மனித உரிமை அமைப்புகள்தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications