சென்னை போலீஸ் 150: இன்று கோலாகல விழா
சென்னை:சென்னை மாநகர காவல்துறையின் 150வது ஆண்டு விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல்வர்கருணாநிதி விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
சென்னை காவல்துறை உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து 150வது ஆண்டு விழாவுக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் இந்த விழா நடைபெறும்.
150வது ஆண்டு விழாவையொட்டி சென்னை மாநகரில் உள்ள 121 காவல் நிலையங்களும் விழாக்கோலம்பூண்டுள்ளன. அனைத்து காவல் நிலையங்களும் வெள்ளை அடிக்கப்பட்டு, விளக்குகள் தொங்க விடப்பட்டுதிருவிழாக் கோலமாக உள்ளது.
காவல் நிலையத்திற்கு வருகிற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்படுகின்றன. மாநகர காவல்துறை ஆணையர்அலுவலகமும் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது.
இன்று மாலை 4 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 150வது ஆண்டு விழாவை முதல்வர்கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியின்போது காவல்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்தை முதல்வர் கருணாநிதிவெளியிடுகிறார். விழா மலரையும் அவர் வெளியிடுகிறார்.
சென்னை மாநகர காவல்துறைக்கு புதிய அலுவலகத்திற்கான அடிக்கல்லையும் விழாவின்போது கருணாநிதிநாட்டுகிறார்.
150வது ஆண்டு விழாவையொட்டி கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆரம்ப காலம் முதல்சென்னை காவல்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அந்தக் கால போலீஸ் சீருடைகள், தொப்பிகள், துப்பாக்கிள், அந்தக் கால காவல் நிலையங்கள், இப்போதுஏற்பட்டுள்ள மாற்றங்கள் செட் போட்டு வைத்துள்ளனர். மேலும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியல் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொள்கிறார். இந்தநிகழ்ச்சி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications