மந்திரி பொன்முடி மீதான 3 வழக்குகள் தள்ளுபடி
விழுப்புரம்:கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொன்முடி தொடரப்பட்ட 3 வழக்குகளையும் விழுப்புரம் நீதிமன்றம்தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முந்தைய திமுக ஆட்சியின்போது ரேசன் கடைகளில் புழுத்துப்போன அரிசி போடப்பட்டதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். இந் நிலையில் கடந்த 26.06.2001ம் தேதிவிழுப்புரம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் அதிரடியாக நுழைந்தார் பொன்முடி.
தனது ஆதரவாளர்களுடன் வாணிபக் கிடங்குக்கு சென்று அரிசியை ஆய்வு செய்ததோடு, திமுக ஆட்சியில்வாங்கி வைக்கப்பட்ட அரிசியை எடுத்துக் கொண்டு வந்து செய்தியாளர்களிடம் காட்டினார். அந்த அரிசிநன்றாகவே இருந்தது.
இதையடுத்து பொன்முடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 14 பேர் மீது அத்துமீறு நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் நுழைந்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா விழுப்புரம் வந்தபோது அவரை வரவேற்க அதிமுகசார்பில் வைக்கப்பட்டிருந்து டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த பேனர்களை சிலர் சேதப்படுத்தினர். இதுதொடர்பாகவும் பொன்முடி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக பொன்முடியை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது,போலீசாருடன் தகராறு செய்து அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், மிரட்டியதாகவும் பொன்முடிமீது விழுப்புரம் டவுன் போலீசார் இன்னொரு வழக்கையும் பதிவு செய்தனர்.
இந்த 3 வழக்குகளும் விழுப்புரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தன. இந்நிலையில்ஆட்சி மாறியது. பொன்முடி மீதான 3 வழக்குகளையும் தள்ளுபடி செய்ய தமிழக அரசு கேட்டுக் கொண்டது.இதற்கான உத்தரவு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந் நிலையில் பொன்முடி மீதான 3 வழக்குகளும் நீதிபதி விஜயகாந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.அப்போது தமிழக அரசின் சிபாரிசை ஏற்று பொன்முடி மீதான 3 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிஉத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications