ஐஐடி இடஒதுக்கீடு: புதிய சதி திட்டம்-ராமதாஸ்
திண்டிவனம்:நம் நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்பதில்கண்ணும் கருத்துமாக இருந்த ஐஐஎம், ஐஐடிகளின் இயக்குனர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுகோரி மனித வளத்துறை அமைச்சகத்தை நெருக்கி வருகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டிவனத்தில் தனது தோட்டத்தில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த அந்த கல்விநிலையங்களின் இயக்குனர்கள் இப்போது வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதுபிற்பட்டவர்களுக்கு எதிரான அவர்களது மன நிலையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
நம் நாட்டைச் சேர்ந்த பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகஇருந்தவர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்காக கொடி பிடிப்பது ஏன்?
இந்தக் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாநிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால், அந்த ஒப்புதல் கிடைக்கும் முன்பேஅவசர அவசரமாக நுழைவுத் தேர்வை நடத்தி முடிக்க ஐஐஎம், ஐஐடி நிறுவன இயக்குனர்கள் முயன்றுவருகின்றனர்.
சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டியிருக்கும்என்பதால் இந்த அவசரத்தைக் காட்டுகிறார்கள். இதனால் ஜனாதிபதியில் ஒப்புதல் கிடைத்து சட்டம்அதிகாரப்பூர்வமான பின்னர் தான் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்.
இலங்கை தமிழர்களை பாதுகாக்க காண முதல்வர் கருணாநிதி தீவிரம் காட்டி வருகிறார். பிரச்சனைக்குபேச்சுவார்த்தை தான் ஒரே தீர்வு.
விழுப்புரத்தில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரி தரிசு நிலத்திலோ அல்லது கண்மாயிலோ தான் அமையவேண்டும். விவசாய நிலத்தை இதற்காக கையகப்படுத்தக் கூடாது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications