சதாம் தூக்கு-செல்போனில் படம் பிடித்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:சதாம் உசேன் தூக்கில் போடப்படுவதை செல்போனில் படம் பிடித்த அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சதாம் உசேன் கடந்த சனிக்கிழமை தூக்கில் போடப்பட்டார். அப்போது அதுவீடியோவில் படமாக்கப்பட்டது. இந்தக் காட்சிகள் பின்னர் மீடியாக்களுக்கு அரசால்வழங்கப்பட்டது. இதில் கழுத்தில் கயிற்றை போடுவது வரையிலான காட்சிகள்மட்டுமே வெளியிடப்பட்டன.

Saddams last moments

ஆனால் சதாமுக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அங்கிருந்தவர்களில்ஒருவர் செல்போன் கேமரா மூலம் முழுக் காட்சிகளையும் படம் பிடித்தார்.

இந்தக் காட்சிகளை பின்னர் அவர் சில தொலைக்காட்சிகளுக்கும், இணையதளங்களுக்கும் வழங்கினார். அதில் சதாம் தூக்கில் போடப்படுவதற்கு முன்புஅங்கிருந்தவர்கள் சதாமை சரமாரியாக விமர்சித்தது, அவர்களுக்கு சதாம்பதிலளிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் சதாம் இறந்த பிறகு ஒழிந்தான் சர்வாதிகாரி என்ற கோஷம் போடப்பட்டதும்இடம் பெற்றுள்ளது.

இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தூக்கில் போடுவது தொடர்பான சர்வதேசவிதிமுறைகளை இராக் அரசு மீறி விட்டது என்றும், அமெரிக்க ராணுவம் மீது குற்றம்சாட்டியும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

ஆனால் இதை அமெரிக்க ராணுவம் மறுத்தது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் வில்லியம் கால்டுவெல் கூறுகையில், இந்தவீடியோவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நாங்கள் சதாமை தூக்கிலிட்டிருந்தால் இதுபோல நடந்திருக்காது. முழுக்க முழுக்கஇராக் அரசு சம்பந்தப்பட்ட விஷயம் இது.

காலை 5.30 மணிக்கு சதாமை ஈராக் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு எங்களதுபடைகள் அங்கிருந்து திரும்பி விட்டன. எங்கு சதாம் தூக்கிலிடப்பட்டார் என்பது கூடஎங்களுக்குத் தெரியாது என்று புருடா விட்டார் கால்டுவெல்.

இதற்கிடையே, சதாம் தூக்கிலிடப்பட்ட காட்சியை இரண்டு அரசு அதிகாரிகள்தங்களது செல்போன் மூலமாக படம் பிடித்ததாக தண்டனை நிறைவேற்றப்பட்டபோதுஉடன் இருந்த மங்கீத் அல் பரூன் என்ற வழக்கறிஞர் கூறியுள்ளார். ஆனால் அறைக்குவெளியே இருந்த பாதுகாவலர்கள்தான் சதாமை நோக்கி கோஷமிட்டதாகவும் அவர்கூறியுள்ளார்.

இந் நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை செய்த இராக் அரசு தற்போதுபாதுகாவலர் ஒருவரைக் கைது செய்துள்ளது. இவர் மூலமாக செல்போன் படம்வெளியே போனதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

சதாம் உசேன் ஒரு தியாகி: சிவ சேனா

இதற்கிடையே ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஒரு தியாகி என சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரான பால் தாக்ரே நடத்தும் சாம்னா பத்திரிக்கையில் வெளிவந்துள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது,

சதாம் உசேன் ஒரு தியாகி. அப்பாவிகளை கொன்று குவித்தார் என்று குற்றம்சாட்டி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேஅளவுகோலை அமெரிக்க அதிபர் புஷ்க்கு பயன்படுத்தினால், அவரை ஆயிரம் முறை தூக்கில் போட வேண்டி வரும்.

சாதம் உசேன் உண்மையில் ஒரு போராளியாக வாழ்ந்தார். போராளியாகவே மரணமடைந்தார். அமெரிக்க அரசின் மாபெரும் சதித் திட்டத்தின் சிறியபகுதியே சதாம் தூக்கிலிட்ட சம்பவம். பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அல்-கொய்தாவுக்கு அடைக்கலம் தருவதாகவும் சதாம் மீதுகுற்றம் சாட்டினார்கள்.

ஆனால் எந்தக் குற்றச்சாட்டையும் அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் மற்றும் நிழல் உலக தாதா தாவூத்இப்பராகீம் ஆகியோருக்கு பாகிஸ்தான் அரசு மறைமுகமாக ஆதரவளித்து வருகிறது.

ஈராக்குக்கு பதிலாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் தீவிரவாதிகள் அழிந்திருப்பர். உலகில் அமைதி ஏற்பட்டிருக்கும் எனகூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+