அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்குமா?
மதுரை:உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ளதடை நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு வருகிற9ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்படவுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. அதிகஅளவிலான சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த ஜல்லிக்கட்டு உள்ளது.நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் பாரம்பரிய விளையாட்டுஇது.
ஆனால் சமீப காலமாக ஜல்லிக்கட்டில் பலர் உயிரிழப்பதால் இந்த வீரவிளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சமீபத்தில் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதி பானுமதி,ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தம் ஆகியவற்றை நடத்த இடைக்காலத் தடை விதித்தார்.
இதனால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஜல்லிக்கட்டு ரசிகர்கள் பெரும்ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் பொங்கல் திருநாள் நெருங்கி வருவதால்மதுரை பக்கம் உள்ள கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டுக்கு காளைகளைத்தயார்படுத்தும் பணி படு மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு கிராம மக்கள் சார்பில் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயத்திற்கு விதிக்கப்பட்டுள்ளதடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், நாட்டில் அவசரநிலைபிரகடனம் செய்யப்பட்டபோது கூட ஜல்லிக்கட்டு நடந்தது. மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் தடுத்து வருகிறார்.
ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என்றால் கெட்ட சகுனமாக கருதப்படும். ஊருக்குஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. எனவே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைநடத்துவதற்கு போலீஸாரோ, மாவட்ட நிர்வாகமோ தடை விதிக்கக் கூடாது என்றுகூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் தர்மாராவ், ஜனார்த்தனராஜா ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தமிழக அரசின்தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதாட விருப்பதால் விசாரணையைத் தள்ளிவைக்குமாறு அரசு வழக்கறிஞர் வாதாடினார்.
இதையடுத்து இதுதொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் 9ம் தேதிக்குதள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்குத் தடை நீங்குமா என்பது அன்று தெரியவரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications