27% இடஒதுக்கீடு சட்டத்துக்கு கலாம் ஒப்புதல்!
டெல்லி:மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒப்புதல்வழங்கியுள்ளார்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா பலத்த எதிர்ப்புக்குமத்தியில் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தமசோதாவில் நேற்று அப்துல் கலாம் கையெழுத்திட்டார். இதையடுத்து இந்த மசோதாசட்டமாகியுள்ளது.
இந்த கல்வியாண்டு முதலே இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது. இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவினரும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற விகிதத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
இதேபோன்ற இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறாத தனியார் சுய நிதி கல்லூரிகளிலும்அமல்படுத்த அரசு சட்ட மசோதாவைத் தயார் செய்துள்ளது. விரைவில் இதுவும்நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று ஏற்கனவே மத்திய மனித வளத்துறைஅமைச்சர் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.
இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லியிலும் வேறு சில இடங்களிலும் பாஜகமாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தபோராட்டக்காரக்களுக்கு பாஜகவும் ஆதரவு தந்தது. ஆனால், சட்ட மசோதா கொண்டுவரப்பட்டபோது பிற்பட்டவர்களின் வாக்குகளை மனதில் வைத்து அமைதியாகவாக்களித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications