பெரியாறு சுவர் சேதம்: கேரளாவின் சதி-பாஜக
சென்னை:முல்லைப் பெரியாறு அணையை உடனடியாக மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசியஒற்றுக்ைகு மட்டுமல்லாமல், திராவிடக் கொள்கைகளுக்கும் ஒரு பெரும் மிரட்டலாகஇந்தப் பிரச்சினை அமைந்துள்ளது.
அணையின் கைப்பிடிச் சுவர் சேதப்படுத்தப்பட்டுள்ளதில் கேரள அரசின் திட்டமிட்டசதி இருப்பது போலத் தோன்றுகிறது. அணைக்குப் பாதுகாப்பு தர மத்திய படைகளைஅனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு பிரதமரிடம் கோரியிருப்பதை நான்வரவேற்கிறேன்.
142 அடியாக தண்ணீர் இருப்பு அளவை உயர்த்த வேண்டும் என்ற உத்தரவைஅமல்படுத்த உதவக் கோரி உச்சநீதிமன்றத்தை விரைவில் தமிழக அரசு நாடவேண்டும்.
மதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவு எனக்கு கவலை தருகிறது. எந்த அரசியல்கட்சியும் பிளவுபடுவது சந்தோஷமான விஷயம் அல்ல. ஆனால் மதிமுக விவகாரம்அக்கட்சியின் உள்விவகாரம் என்பதால் இதற்கு மேல் அதற்குள் போகவிரும்பவில்லை.
சமீபத்தில் டெல்லியில் பிடிபட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளிடம் நடத்தியவிசாரணையில், டெல்லியில் குண்டு வைத்து விட்டு சென்னை வழியாகபாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இதைப் பார்க்கும்போது சென்னை தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாகி விட்டதோஎன்று எண்ணத் தோன்றுகிறது. சமீபத்தில் சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர்தயாரிப்பு தொழிற்சாலையை தமிழக போலீஸார் கண்டுபிடித்தனர்.
ஆந்திர நக்சலைட்டுகளுக்கு இங்கிருந்து ராக்கெட் லாஞ்சர்கள் அனுப்பப்பட்டுள்ளன.இவற்றில் உள்ளூர் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பதுகுறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
தென்காசியில், இந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியனைக் கொன்றஉண்மையான குற்றவாளியை போலீஸார் இன்னும் விட்டு வைத்துள்ளனர். அவரைஉடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார் கணேசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications