தீக்குளிப்பது போல நடித்த சிறுவன் பரிதாப சாவு
சென்னை:டிவியில் வரும் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு அதேபோல தனது வீட்டில் தீக்குளித்துப்பார்க்க முயன்ற சிறுவன் பரிதாபமாக இறந்து போனான்.
சென்னை வியாசர்பாடி தேசிகானந்தபுரம் பகுதியச்ை சேர்ந்தவன் பிரேமானந்த். 8வயதாகும் இவன் சிறு வயதிலேயே தந்தை, தாயை இழந்தவன். தனது பாட்டி கோதைநாயகியுடன் வசித்து வந்தான்.
அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 5ம் வகுப்பு படித்து வந்தான்.புதன்கிழமை மதியம் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பிரேமானந்த் தனது வீட்டில்பெரியம்மா மகன் ஈஸ்வருடன் (அவனுக்கு வயது 4) சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான்.
பிறகு இருவரும் டிவியில் கார்ட்டூன் படம் பார்த்துள்ளனர். அப்போது பவர் ரேஞ்சர்ஸ்என்ற நிகழ்ச்சியில் வரும் ஒரு காட்சி பிரேமானந்த்தைக் கவர்ந்துள்ளது. அதை தானும்செய்து பார்க்க விரும்பிய அவன், ஈஸ்வரை அவனது வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டான்.
பின்னர் வீட்டின் சமைலயறைக்குள் சென்ற பிரேமானந்த் அங்கிருந்த மண்ணெண்ணைடின்னை எடுத்து அதிலிருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீவைத்துள்ளான்.
டிவியில் வருவது போல தானும் நெருப்பிலிருந்து தப்பி வருவோம் என நினைத்துஇவ்வாறு செய்தான். ஆனால் உடல் முழுவதும் பரவிய நெருப்பு அந்த சிறுவனைபொசுக்கி விட்டது.
பிரேமானந்த்தின் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவனை மீட்டுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பவர் ரேஞ்சர்ஸ் பார்த்துவிட்டுத்தான் இதுபோல செய்ததாக பிரேமானந்த் வாக்குமூலம் கொடுத்தான். பின்னர்சிகிச்சை பலனின்றி பிரேமானந்த் பரிதாபமாக இறந்தான்.
தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளில் எவற்றை குழந்தைகள் பார்க்கலாம்,பார்க்கக் கூடாது என்பதில் பெற்றோரும், குடும்பத்தினரும் மிகக் கவனமாக இருக்கவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற துயரங்களை தவிர்க்க முடியும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications