ஜட்டி, பனியனுடன் கைதி எஸ்-பெண்கள் பீதி
சென்னை:சென்னை அருகே பூந்தமல்லி காவல் நிலையத்திலிருந்து கை விலங்கு மாட்டப்பட்ட கைதி, ஜட்டி, பனியனுடன் அதிகாலையில்தப்பி ஓடியதால் தெருவில் போட்டுக் கொண்டிருந்த பெண்கள் பீதியடைந்து வீட்டுக்குள் ஓடினர்.
பூந்தமல்லி அருகே குன்றத்தூர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அதிக அளவில் திருடு போய் வந்தன.இதுதொடர்பாக குன்றத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அதிக அளவில் புகார்கள் வந்தன.
இதையடுத்து தீவிர வேட்டையில் இறங்கிய போலீஸார் குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே வைத்து ஒரு நபரை மடக்கினர்.
அவரது பெயர் வெங்கடேசன் என்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த அவர் 27க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களைத்திருடியவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நபரை குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர். கைவிலங்கிடப்பட்ட நிலையில்அவரை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அவரது ஆடைகளைக் கழற்றி வெறும் ஜட்டி-பனியனுடன் வைத்திருந்தனர்.
அதிகாலையில் வெங்கடேசன் காவல் நிலையத்திலிருந்து தப்பினார். கைவிலங்கு மாட்டிய நிலையில் ஜட்டி, பனியனுடன் அவர்தெருவில் இறங்கி ஓடினார். மார்கழி மாதம் என்பதால் அந்த அதிகாலை நேரத்தில் அத்தெருவில் குடியிருக்கும் பெண்கள்கோலம் போட்டுக் கொண்டிருந்தனர்.
ஜட்டி, பனியனுடன் ஒரு நபர் ஓடி வந்ததைப் பார்த்து அவர்கள் தெறித்துப் பாய் வீட்டுக்குள் ஓடினர். இந்த சம்பவம்அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பனியன்-ஜட்டி வெங்கடேசனை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications