சோ மகனின் கட்டட கடைகளை இடிக்க உத்தரவு
சென்னை:துக்ளக் ஆசிரியர் சோவின் மகனுக்கு சொந்தமான கட்டிடத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளை 6மாதங்களுக்குள் இடித்துத் தள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சிபி ராமசாமி சாலையில் இருந்த ஆழ்வார்பேட்டை நிதி நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை சோவின்மகன் ஸ்ரீராம் வாங்கினார். அதில் வர்த்தக மையத்தைக் கட்டினார். ஆனால், விதிகளை மீறி அடித்தளத்திலும்கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். இதையடுத்து அந்த கடைகளை இடிக்க சிஎம்டிஏ உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஸ்ரீராம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில்,
சென்னை சிபி ராமசாமி சாலையில் ஆழ்வார்பேட்டை நிதி நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. இந்தநிறுவனம் மூடப்பட்டதால் அது விற்கப்பட்டது. அதை நான் ரூ. 10.75 கோடிக்கு வாங்கினேன்.
அதில் அடுக்குமாடி வீடுகள் கட்ட சட்டப்படி அனுமதி பெற்றேன். அடித்தளம் மற்றும் தரைத் தளத்தை புத்தக்கடைக்கும், நீல்கிரீஸ் கடைக்கும் வாடகைக்கு விட்டேன். அதற்கு அனுமதி கேட்டு சிஎம்டிஏவுக்குவிண்ணப்பித்தேன். அது நிலுவையில் இருக்கும் நிலையில் கடைகளை இடிக்க சிஎம்டிஏ நோட்டீஸ்அனுப்பியுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என அதில் ஸ்ரீராம் கூறியிருந்தார்.
அதன்பேரில் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை நீக்கக் கோரி சிஎம்டிஏ மனு தாக்கல் செய்தது.அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சதாசிவம், பால் வசந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்குவந்தது.
அப்போது சிஎம்டிஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமன் கூறியதாவது, மனுதாரர்கள் இரண்டு 8 மாடிகட்டிடங்கள் கட்டியுள்ளனர். முதலில் அவர்களுக்கு சிடிஎம்ஏ கொடுத்த அனுமதியின்படி அடித்தளம், தரைதளத்தில் ஸ்டோர் ரூம், ஜெனரேட்டர் ரூம், பாதுகாவலர்கள் ரூம் இருக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தையும்அவர்கள் வியாபார நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இது விதி மீறல், தவறு.
எனவே தான் அந்த பகுதிகளை இடிக்க சிஎம்டிஏ நோட்டீஸ் அனுப்பியது. இதனால் இடிப்புக்கு தடை விதிக்கக்கூடாது. விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். மேலும் விதிமுறை மீறிய கட்டிடங்களை இடிக்கஉயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்றார்.
ஸ்ரீராம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணப்பன், அடித்தளம், தரைத் தள பகுதிகளை நாங்களே பழையநிலைக்கு கொண்டு வருகிறோம். அதற்கு 6 மாதம் அவகாசம் தேவை என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 6 மாதத்திற்குள் கடைகளை அகற்ற விட்டால், விதியை மீறியபகுதிகளை சிஎம்டிஏ இடிக்கலாம் என்று தீர்ப்பு கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications