பிஜி: பிரதமரானார் ராணுவ தளபதி பைனிமராமா
சுவா:பிஜி அரசியலில் இன்னொரு திருப்பமாக அந்நாட்டு ராணுவ தளபதி பிராங்க்பைனிமராமா பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இந்திய வம்சவாளியினர் பெரும்பான்மையாக உள்ள பிஜியில் கடந்த மாதம் ரத்தம்சிந்தாத ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்த்தார் பைனிமராமா. பிரதமர் கராசேவீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். எதிர்ப்பு வலுத்ததால்அவர் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு அதிபர் ராட்டு ஜோசபா இலாய்லோவின்அதிகாரங்களையும் பைனிமராமா பறித்தார்.
பைனிமராமாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள்கடும் கண்டனம் தெரிவித்தன.பிஜிக்கான ராணுவ உதவிகளை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்தடை செய்தன.
இந்த நிலையில் அதிபரின் அதிகாரங்களை நேற்று மீண்டும் அவருக்கு வழங்கினார்பைனிமராமா. இன்று இன்னொரு திருப்பமாக தானே இடைக்கால பிரதமராகபதவியேற்றார் பைனிமராமா.
அவருக்கு அதிபர் இலாய்லோ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர்பைனிமராமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இடைக்கால அரசின் தலைவராகவும்(பிரதமர்), ராணுவத் தலைமைத் தளபதியாகவும் நான் நீடிப்பேன்.
அனைத்து வகையிலும் நம்பகத்தன்மை கொண்ட, உண்மையான பிரதமராக நான்இருப்பேன். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்துசெயல்படுவோம்.
புதிய தேர்தல் விரைவில் நடைபெறும். அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும்என்றார். ஆனால் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை பைனிமராமாதெரிவிக்கவில்லை. இந்த மாத இறுதிக்குள் 30 பேர் கொண்ட புதிய அமைச்சரவைபதவியேற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புரட்சியின் போது பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை தொடர்ந்து நீடிக்கும் என ராணுவம்அறிவித்துள்ளது. கராசே தொடர்ந்து பிஜி தீவுக்குள்ளேயே இருக்க வேண்டும், வேறுஎங்கும் அவர் போகக் கூடாது எனவும் ராணுவம்அறிவித்துள்ளது.
இதற்கிடையே வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தலைநகர்சுவாவிலிருந்து வெளியேறிய கராசே அடுத்த வாரம் சுவா திரும்பவுள்ளதாகதெரிவித்துள்ளார்.
கடந்த 1987ம் ஆண்டுக்குப் பின்னர் பிஜியில் நடந்துள்ள நான்காவது புரட்சிாயகும்இது. கடைசியாக 2000மாவது ஆண்டில் இந்திய வம்சாவளி பிரதமரான மகேந்திர சிங்செளத்ரி புரட்சி மூலம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications