ஒரிஜினல் யார்?-ஆணையத்துக்கு எல்ஜி கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:எங்களது தலைமையிலான மதிமுகதான் உண்மையான மதிமுக கட்சி தொடர்பான அனைத்துநடவடிக்கைகளுக்கும் இனிமேல் எங்களையே தொடர்பு கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்குஎல்.கணேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக எல்.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 29.11.2006 அன்று சேலத்தில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளராக இருந்த வைகோ பொதுக்குழு எடுத்த முடிவின்படிஅப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஏகமனதாக செஞ்சி ராமச்சந்திரன் பொதுச் செயலாளராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தத் தீர்மானத்தை முறையாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தெரிவித்துள்ளோம். இனிமேல்மதிமுக தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களையே தொடர்புகொள்ளுமாறும் தேர்தல்ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார் எல்.கணேசன்.

பிரதமரின் அக்னாலட்ஜ்மென்ட்:

இந் நிலையில் மதிமுகவை உடைக்க முதல்வர் கருணாநிதி முயற்சிப்பதாக புகார் கூறிஅக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ எழுதிய கடிதம் வந்து சேர்ந்தது என்றுபிரதமர் மன்மோகன் சிங், வைகோவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக செய்தித் தொடர்பாளர் நன்மாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதிமுகவுக்கு சேதம் ஏற்படுத்த திமுக தலைவர் கருணாநிதி சதித் திட்டம் தீட்டியதாகபிரதமர் மன்மோகன் சிங்குக்கு பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு 28.12.2006 தேதியிட்ட கடிதத்தில், தங்களுடைய இயக்கச்செயல்பாடுகளுக்கு சில சக்திகள் இடையூறு செய்வதாக குறிப்பிட்டு டிசம்பர் 24, 2006தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன் என வைகோவுக்கு பிரதமர்தெரியப்படுத்தியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது (இதுக்கு ஒரு அறிக்கையாப்பா?).

காங் மூலம் மதிமுக எம்பியை இழுக்க முயற்சி?

காங்கிரஸ் பிரமுகர் மூலம் மதிமுக எம்பியை இழுக்க எல்.ஜியும், செஞ்சியும் முயற்சிப்பதாக மதிமுக எம்எல்ஏ கண்ணப்பன் கூறியுள்ளார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் மதிமுக எம்பிக்ளை விலைக்கு வாங்க முயன்றனர். ஆனால் அவர்களின்முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டது.

சென்னையில் வரும் 10ம் தேதி மதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதில் மதிமுகவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.எங்களிடம் பெரும்பான்மை பலம் இருப்பதால் எல்.ஜியும், செஞ்சியும் துவண்டு போயுள்ளனர்.

மதிமுக எம்பி. கிருஷ்ணனை அவர்கள் பக்கம் இழுக்க பல முயற்சிகளில் ஈடுபட்டனர். இதற்காக ரூ. 15 கோடி பேரம் பேசினார்கள். ஆனால் அதைகிருஷ்ணன் ஏற்கவில்லை. அதன் பிறகு ஒரு காங்கிரஸ் பிரமுகர் மூலம் கிருஷ்ணனை மதிமுகவில் இருந்து பிரித்து கொண்டு செல்ல பல முயற்சிகள் நடந்தது. ஆனால்அதற்கும் கிருஷ்ணன் ஒத்துழைக்கவில்லை. எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றார்.

வைகோ கூட்டம் செல்லாது: எல்.ஜி-செஞ்சி

இந் நிலையில் எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் சென்னையில் கூட்டாகசெய்தியாளர்களைச் சந்தித்தனர். அவர்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவேநாங்கள் மிகுந்த மன வேதனையுடன், கவலையோடு இருந்தோம். 29ம் தேதி நடந்தசேலம் பொதுக் குழுக் கூட்டதிதற்குப் பின்னர் மன பாரம் இறங்கி விட்டது.

13 வருடங்களாக மெய் வருத்தம் பாராமல் உழைத்தோம். உயர்ந்த இடத்தில்மதிமுகவைக் கொண்டு வர முடியும், ஆளுங்கட்சியாக உயர முடியும் என்று நம்பிபாடுபட்டோம். ஆனால் ஒளிமயமாகத் தோன்றிய மதிமுக ஒளி, படிப்படியாக மங்கிஇருளில் மூழ்கி விடக் கூடிய நிலையை எட்டிக் கொண்டிருந்தது. இதனால் வேதனைஅடைந்தோம்.

ஒரு கட்சியில் எழுச்சி, வளர்ச்சி, தளர்ச்சி, வீழ்ச்சி என்பது அதன் தலைவரைப்பொறுத்துதான் இருக்கிறது. காங்கிரஸ் என்றால் நேரு-இந்திரா, திமுக என்றால்அண்ணா-கலைஞர், அதிமுக என்றால் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா. அதேபோல மதிமுகஎன்றால் வைகோ தான் என்ற அடிப்படையில், அவரது தோற்றத்தை தூக்கி நிறுத்ததியாகம் செய்தோம்.

ஆனால் முடியவில்லை. அதற்கு அடிப்படைக் காரணம் கூட்டணியை மாற்றியதுதான்.இதன் மூலம் அவர் நம்பகத் தன்மையை இழந்து விட்டார். கூட்டணியை மாற்றுவதுவிந்தை அல்ல. ஆனால் அதற்கான நெறிமுறைகள் இல்லாத முறையில்மாற்றியதுதான் பிரச்சினையாகி விட்டது.

வைகோவை 19 மாதம் சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா. அப்போது கட்சியைதொய்வின்றி நடத்த நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு கை கொடுத்தவர் கலைஞர்.

வைகோவை விடுதலை செய்ய கையெழுத்து வாங்கியபோது முதல் கையெழுத்துப்போட்டவர் கலைஞர். கலைஞரின் ஒரு கையெழுத்து 1 கோடி கையெழுத்துக்களுக்குச்சமம் என்று பாராட்டியவர் வைகோ. பொடா மறு ஆய்வுக் குழு வைகோவைவிடுவிக்க உத்தரவிட்டும் அதை செயல்படுத்த மறுத்தவர் ஜெயலலிதா.

திமுக திருச்சி மாநாடு நடந்து கொண்டிருந்தபோது அதில் வைகோ கலந்துகொள்ளவில்லை. மறுநாளே அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்தார். மக்கள்இதை ஏற்பார்களா?

கூட்டணி அமைத்தால் திமுகவுடன் தான் அமைய வேண்டும். அதிமுகவுடன் கூட்டணிவைத்தால் நான் திருச்சியில் திமுகவுக்கு எதிராக வேலை பார்க்க மாட்டேன் என்றுஅப்போதே நான் வைகோவிடம் கூறினேன். நான் திருச்சியில் 2வது முறை அதிகவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற திமுகதான் காரணம்.

சிறு சிராய்ப்பு கூட ஏற்படவில்லை என்கிறார் வைகோ. அப்படியென்றால் ஏன்200க்கும் மேற்பட்டவர்களை கட்சியை விட்டு நீக்கினார்?

இனி மதிமுக என்றால் செஞ்சி ராமச்சந்திரன்தான். எங்களது பொதுக்குழு முடிவுகளைதேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்து விட்டோம். அடுத்த கட்டமாக எங்களதுநடவடிக்கைகளை பொதுக்கூட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் மக்களிடம்தெரியப்படுத்தி ஆதரவு திரட்டுவோம்.

10ம் தேதி வைகோ கூட்டும் பொதுக்குழு செல்லாது. அதுபற்றி நாங்கள்கவலைப்படவில்லை.

கம்யூனிஸ்டுகள் தனித் தனியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைக்காக ஒன்று பட்டுப்போராடுவது போல திமுகவும், மதிமுகவும் இணைந்து போராட வேண்டும் என்றுஏற்கனவே கலைஞர் கூறியிருந்தார். அவருடைய கருத்து எங்களுக்குஉடன்பாடானதுதான்.

மதிமுகவை உடைக்க கலைஞர் பணம் கொடுத்தார் என்பது அபாண்டானகுற்றச்சாட்டு. மதிமுக தொண்டன் கொதித்துப் பாயிருக்கிறான். பிரபாகரனை தூக்கில்போட வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்துள்ளதைதிராவிட இயக்க லட்சியவாதிகள் ஏற்க மாட்டார்கள்.

மதிமுக கூட்டணியில் நீடிப்பதாக மத்திய அமைச்சர் பி.ஆர்.தாஸ் முன்ஷிகூறியுள்ளார். ஆனால் கடந்த தேர்தலுக்குப பிறகு நடந்த எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ள மதிமுகவுக்கு அழைப்பு வந்ததில்லை.

நாங்கள்தான் மதிமுக என்பதை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் நிரூபிப்போம்.தாயகத்தை கைப்பற்றப் போவதாக வைகோ நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆனால்எங்களிடம் அப்படிப்பட்ட எண்ணம் ஏதும் இல்லை என்றார்கள் எல்.ஜியும்,செஞ்சியாரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+