15,000 சென்னை போலீஸாருக்கு பதக்கம்
சென்னை:சென்னை காவல்துறையின் 150வது ஆண்டு விழாவையொட்டி சென்னை மாநகரகாவல்துறையில் பணியாற்றும் 15,000 போலீஸாருக்கும் பதக்கம் வழங்கப்படும் எனமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
![]() |
1856ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை மாநகர காவல்துறை 150 ஆண்டுகளைதாண்டியுள்ளது. 150வது ஆண்டு நிறைவு விழா நேற்று மாலை தொடங்கியது.
எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடந்த விழாவை முதல்வர் கருணாநிதிதொடங்கி வைத்தார். விழாவுக்கு வந்த கருணாநிதியை தலைமைச் செயலாளர்திரிபாதி, உள்துறைச் செயலாளர் மாலதி, டிஜிபி முகர்ஜி, சென்னை மாநகரகாவல்துறை ஆணையர் லத்திகா சரண் ஆகியோர் மலர் கொத்து கொடுத்துவரவேற்றனர்.
பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதை முதல்வர் கருணாநிதிஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், இந்திய காவல் துறைக்கேமுன்னோடியாக சென்னை காவல்துறை விளங்குகிறது.
1856ம் ஆண்டு முறையான சட்டம், விதிமுறைகள் வகுக்கப்பட்டு காவல்துறைஏற்படுத்தப்பட்டது. பின்னர் ஆணையர் பதவியும் உருவானது.
1856ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி முதல் ஆணையராக கர்னல் வேல்டஸ்டன்பதவியேற்றார். இப்போது சென்னை மாநகரில் 12 காவல் மாவட்டங்களும், 3மண்டலங்களும் உள்ளன. போக்குவரத்துப் பிரிவு 3 அமைப்பாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல்துரை 1,874 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு கோடிமக்களுக்கு தொண்டு செய்யும் பொறுப்பில் உள்ளது. கடந்த 1973ம் ஆண்டுகாவல்துறையில் முதன் முதலாக பெண்கள் நியமிக்கப்பட்டது திமுக அரசில்தான். 150வது ஆண்டு கொண்டாட்டத்தின்போது 92வது ஆணையராக ஒரு பெண்மணிஇருப்பதும் பெருமைக்குரியது. கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி மற்றும் நவம்பர் 1ம் தேதியிலிருந்து 2207போலீஸார் 2ம் நிலைக் காவலர்களாக தரம் உயர்த்தப்பட்டனர். கடந்த மானியக்கோரிக்கையின் போது காவலர்கள் முதல் சப் இன்ஸ்பெக்டர்கள் வரையிலானபணியில் உள்ளவர்களுக்கு இடர்காலப் படி 60 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகஉயர்த்தப்பட்டது. அதேபோல டிஎஸ்பிக்கள் முதல் கூடுதல் எஸ்பிக்களாகஉள்ளவர்களுக்கு 70 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்குப் பிரிவில் எஸ்.ஐ ஆக வயது உச்சவரம்பு 53ல் இருந்தது. ஆயுதப்படையில் தலைமைக் காவலருக்கு உச்சவரம்பு 55 வயதாக இருந்தது. சப்இன்ஸ்பெக்டரிலிருந்து இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கு 55 வயதாக இருந்தது. அந்தஉத்தரவு திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் 450 அதிகாரிகள் மற்றும்போலீஸார் பயன் அடைந்தனர். முதல் முறையாக சென்னை காவல்துறைக்கு 100 ஹூண்டாய் கார்கள் ரோந்துப்பணிக்கு வழங்கப்பட்டது. அந்தக் கார்களைப் பயன்படுத்தி கடந்த நவம்பர் மாதம்மட்டும் 285 அழைப்புகளுக்கும், டிசம்பரில் 326 அழைப்புகளுக்கும் சென்று உரியநடவடிக்கை எடுக்கப்பட்டது. 150வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி கடந்த ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி முதல்இந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி வரை உள்ள கால கட்டத்தில் 6 மாதத்துக்கு மேல்பணியாற்றிய 15,000 காவலர்களுக்கு பதக்கம் பரிசாக வழங்கப்படும். இதுதவிர நிறைவு விழாவில் பணியாற்றிய போலீஸார் முதல் கூடுதல் துணைஆணையர்கள் வரை உள்ள 14 ஆயிரத்து 973 பேருக்கு கைப்பட்டை வழங்கப்படும்என்றார் கருணாநிதி. நேற்றைய விழாவின்போது புதிய காவல் நிலையக் கட்டங்களையும் முதல்வர்தொடங்கி வைத்தார். இன்று மாலை நடைபெறும் நிறைவு நாள் விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். 150வது ஆண்டு விழாவையொட்டி கண்காட்சி ஒன்றுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அன்றும் இன்றும் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக்கண்காட்சியை பொதுமக்கள் திரளாக வந்து பார்வையிட்டனர். பழைய காலத்து போலீஸார் அணிந்த உடையைப் போல சிவப்புத் தொப்பி, காக்கிகால் சட்டை, ஜிப்பா உள்ளிட்டவற்றை அணிந்த போலீஸார் சப் இன்ஸ்பெக்டர்சற்குணம் தலைமையிலும், மற்றொரு பழங்காக போலீஸ் உடை அணிந்த போலீஸார்,சப் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையிலும் அணிவகுத்து வந்ததை அனைவரும்ரசித்துப் பார்த்தனர். இதேபோல பெண் எஸ்.ஐ. ரேவதி தலைமையிலும் சிறப்பு அதிரடிப்படை போலீஸார்எஸ்.ஐ. மதன் தலைமையிலும் அணிவகுத்துச் சென்றனர். 1943ம் ஆண்டு ஆணையராக பணியாற்றிய ஷெனாய், 31 ஆண்டு பணியாற்றி ஓய்வுபெற்ற ஆணையரின் நேர்முக உதவியாளர் நடராஜன், 35 ஆண்டுகள் பணியாற்றியசப் இன்ஸ்பெக்டர் நரசிம்மலு, 1978ம் ஆண்டு பணியாற்றி ஓய்வு பெற்ற காவலர்முருகேசன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி நினைவுப் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் காவலர் உங்கள் சேவகர் என்ற குறும்படத்தின் படச் சுருளை அபிராமிராமநாதன் முதல்வரிடம் வழங்க அதை வாங்கி ஆணையர் லத்திகா சரணிடம்முதல்வர் வழங்கினார். போலீஸ் கண்காட்சியை பேட்டரி காரில் அமர்ந்தபடி சென்று கருணாநிதி சுற்றிப்பார்த்தார். பின்னர் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. |
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்

1856ம் ஆண்டு முறையான சட்டம், விதிமுறைகள் வகுக்கப்பட்டு காவல்துறைஏற்படுத்தப்பட்டது. பின்னர் ஆணையர் பதவியும் உருவானது.












Click it and Unblock the Notifications