தமிழக நிலங்களை சுருட்டும் மலையாளிகள்!
கன்னியாகுமரி:அரேபியாவில் ஈட்டும் பணத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் நிலங்களை மலையாளிகள் சுரண்டி வருவதாகபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முப்போகும் விளையும் நஞ்சை, புஞ்சை நிலத்தையும் அபகரித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றும் ஒரு பெரியவியாதி தமிழகத்தில் பரவி வருகிறது. சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் இந்தவியாதி முற்றிவிட்டது.
அதே வியாதி குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளிலும் வேகமாக பரவி வருவதாககேள்விப்பட்டேன். முப்போகம் விளையும் நஞ்சை நிலங்கள் எப்போதும் பச்சை பசேலென்று காட்சி அளிக்கும்இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களில் கல்லை அள்ளிப் போட்டு ரியல் எஸ்டேட்டாக மாற்றி வருகிறார்கள்.
அரேபிய நாட்டுப் பணம் கேரளாவுக்கு அதிகம் வருகிறது. அவர்கள் தான் இங்கு வந்து விளை நிலங்களை நமதுவிவசாயிகளிடம் இருந்து சுரண்டி நம் மக்களிடமே ரியல் எஸ்டேட்டாக மாற்றி விற்று வருகின்றனர்.
பொன் முட்டையிடும் வாத்தை கொல்வது மாதிரி தான் இது. எனவே தமிழகத்தில் விளை நிலங்களை ரியல்எஸ்டேட்டாக்குவதை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அனை விவகாரத்தில் ஒரு உத்தரவைப் போட்டு அணையை கையில் எடுத்து நீர் தேக்கஅளவை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களோடு பேசிக்கொண்டிருக்கக் கூடாது.
7 மாத காலத்தில் திமுக ஆட்சியில் மிகப் பெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. முதலமைச்சர் ஒருசாதனை சிகரமாக விளங்குகிறார். அவருடைய சாதனைகள் தொடர வேண்டும்.
விரைவில் அதிமுக ஆட்சிக்கு வரும் என ஜெயலலிதா சொல்வது அவரது சொந்தக் கருத்து. இதில் கருத்து கூறநான் விரும்பவில்லை.
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். அதே சமயம் கல்வி,வேளாண்மைத்துறைகளை கண்காணிக்க ஒரு நிழல் அமைச்சரவையை அமைக்க விரும்புகிறோம் என்றார்ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications