அமெரிக்க வீரர்களுக்கு நன்றி தெரிவித்த சதாம்
பாக்தாத்:தூக்கில் போடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் சிறையிலிருந்து புறப்பட்ட இராக் முன்னாள் அதிபர் சாதம்உசேன், தனக்குப் பாதுகாப்பு அளித்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
![]() |
இதுகுறித்து அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ராணுவப் படையின் செய்தி தொடர்பாளர் ஜெனரல்வில்லியம் கால்ட்வெல் நிருபர்களிடம் கூறியதாவது,
சதாம் உசேன் இராக்கிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சில மணி நேரத்திலேயை அவர் தூக்கிலிடப்பட்டார்.அதற்கு முன்னர் வரை அமெரிக்க ராணுவ வீரர்கள்தான் அவருக்கு பாதுகாப்பாக இருந்தனர்.
தூக்கில் இடப்படும் சில மணி நேரத்துக்கு முன் சிறையில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்களுடன் அவர் சிறிதுநேரம் உரையாடினார். அப்போது அவர் தனக்குப் பாதுகாப்பு அளித்ததற்காவும், கெளரவமாகநடத்தியதற்காகவும் வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தன்னை கவனித்துக் கொண்ட டாக்டரிடமும், தனது மொழிபெயர்ப்பாளரிடமும் அவர் விடைபெற்ற காட்சி மிகஉணர்ச்சிமயமாக இருந்தது. தூக்கு மேடைக்கு சதாமை தூக்கு மேடைக்கு அழைத்து சென்றபோது, அந்த இடம்முழுக்க முழுக்க இராக்கிய ராணுவத்தினர் வசம் தான் இருந்தது.
அவர்கள் தான் பிரமுகர்களையும், அதிகாரிகளையும் உள்ளே அனுப்பினர். சதாம் தூக்கிலிடப்பட்ட பின் அவரதுஉடலை மீண்டும் அமெரிக்க ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அவரது உடலை எங்காவது புதைக்க இராக்கிய ஆட்சியாளர்கள் நினைத்தனர். ஆனால் அமெரிக்கஆலோசகர்கள் கூறியதால் தான் சதாமின் சொந்த ஊரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது என்றார்.
சதாம் தம்பி, நீதிபதிக்கு 7ம் தேதி தூக்குஇந் நிலையில் சதாம் உசேனுடன் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அவரது ஒன்றுவிட்ட தம்பி பர்ஸான் அல் திக்ரிதி மற்றும் முன்னாள் நீதிபதி அவாத் அல்பாந்தர் ஆகியோருக்கு 7ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
148 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்ட வழக்கில் சதாம் உசேனுடன் சேர்த்து அவரது ஒன்று விட்ட சகோதரர் பர்ஸான் அல் திக்ரிதி மற்றும் முன்னாள்உச்சநீதிமன்ற நீதிபதி அல்பாந்தர் ஆகியோருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
டிசம்பர் 30ம் தேதி சதாம் தூக்கிலிடப்பட்டார். மற்ற இருவரும் பின்னர் தூக்கிலிடப்படுவார்கள் என ஈராக் அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில்இவர்கள் இருவரையும் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை தூக்கிலிடப் போவதாக ஈராக் அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக இருவரும் நேற்று தூக்கிலிடப்படுவார்கள் என ஈராக் அரசு அறிவித்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது தள்ளி வைக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் தூக்கிலிடப்படவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷியா தீவிரவாத அமைப்பான முக்தாதா அல்சதர் பிரிவின் எம்.பி பாகா அல் அராஜித் கூறியுள்ளார். ஈராக் ஆளும் கூட்டணியில் இவரது அமைப்பும் இடம்பெற்றுள்ளது. இத்தகவலை ஈராக் அரசுஅதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications