மப்பில் தூங்கிய கேட் கீப்பர்-காத்திருந்த ரயில்
தர்மபுரி:குடி போதையில் இரவு பணி பார்த்த ரயில்வே கேட் கீப்பர் தூங்கியதால், நடுவழியில் சிக்னல் இல்லாமல் ரயில்நிறுத்தப்பட்டது.
தர்மபுரி அருகேயுள்ள அதியமான் கோட்டையில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு இரவு 11.30 மணிக்குசேலத்தில் இருந்து பெங்களூர் நோக்கி ஒரு சரக்கு ரயில் வந்தது. அதியமான் கோட்டை ரயில்வே கேட் அருகேரயில் வந்த போது சிக்னல் கிடைக்கவில்லை.
இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலிலிருந்து ஹார்ன் அடித்தும் எந்த தகவலும் இல்லை. கால் மணி நேரத்துக்கும்மேலாகியும் சிக்னல் விழாததால் அருகேயுள்ள சிவாடி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டுக்கு சென்று பார்த்தனர். அங்குகேட் கீப்பர் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் கடும் போதையில் இருந்ததார்.
இதையடுத்து போலீஸார் கேட்டை மூடி சரக்கு ரயிலை அனுப்பி வைத்தனர். கேட் கீப்பரின் அலட்சியத்தால் அரைமணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டு தாமதமாக கிளம்பிச் சென்றது. இதையடுத்து அங்கு உடனடியாக வேறு கேட்கீப்பர் பணிக்க நியமிக்கப்பட்டார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு இதே ரயில்வே கிராசிங்கில் வேலை பார்த்த கேட் கீப்பரும் பணி நேரத்தில்தூங்கியதால் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications