பொது குழுவை சீர்குலைக்க பெரும் சதி-வைகோ
சென்னை:சென்னையில் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள மதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை சீர்குலைத்து, கலவரம்ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலத்தில் மாஜிக்கள் இருவர் கூட்டிய கூட்டம் கழக சட்டத் திட்ட விதிகளின்படி செல்லுபடி ஆகாது. சுமார் 60முதல் 70 மதிமுகவினர்தான், அவர்களும் கூட கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள்தான் அந்தக் கூட்டத்தில்கலந்து கொண்டனர்.
பொதுக்குழு உறுப்பினர்களிடம் லட்சக் கணக்கில் பணம் தருவதாக இச்சகம் பேசியும், பதவிகள், காண்டிராக்டுகள்தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியும், காவல் துறையினரைக் கொண்டு மிரட்டியும், இப்படி நேரடிநடவடிக்கைகளில் ஈடுபட்டும் கூட அவர்களது ஜம்பம் பலிக்கவில்லை.
மாஜிக்கள் கூட்டக் குறிப்பேட்டில் மறுமலர்ச்சி திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற பெயரில் பலர் போர்ஜரிகையெழுத்துப் போட்டுள்ளதை நிரூபிக்க முடியும்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில், சேலம் கூட்டத்தில் மதிமுகவின் 400 பொதுக்குழுஉறுப்பினர்களை கணேசன் கறாராகக் காட்டி விட்டார் என்றும், கட்சி 2 ஆக பிளந்து விட்டது என்றும்அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, நான் ஏற்கனவே கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைதான் என்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
அதிமுக கூட்டணியிலிருந்து மதிமுகவை வெளியேற்றுவது முதல் கட்டம். கலகக் கொடி பிடித்து நாங்கள்தான்மதிமுக என்று ஆளும் கட்சியின் அதிகார பலத்தோடும், போலீஸ் துணையோடும் நிலை நாட்ட முயல்வதுஇரண்டாவது கட்டம். அதன் பின்னர் திமுகவோடு கொண்டு போய் இணைப்பது மூன்றாவது கட்டம்.
சதித் திட்டத்தின் முதல் 2 கட்டங்களும் படுதோல்வியில் முடிந்தன. திமுகவினரையே மதிமுக கரை வேட்டி கட்டவைத்து மாஜிக்களுக்கு ஒரு முகாம் அமைத்துக் கொடுத்து திமுக அணியில் சேரும் இன்னொரு கட்சி என்றுஅறிவித்து ஊர் உலகத்தையே ஏய்ப்பதுதான் கடைசிக் கட்டம்.
சட்டப்பூர்வமாக, ஜனநாயக வழியில் மதிமுகவின் அதிகாரப்பூர்வ 16வது பொதுக்குவுக் கூட்டம் ஜனவரி 10ம்தேதி சென்னை அண்ணா நகர் விஜயஸ்ரீ மகாலில் நடைபெற இருக்கிறது.
எப்படியாவது அந்தக் கூட்டத்தை நடத்த விடாமல் சீர்குலைக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு சதித் திட்டம்வகுக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 25ம் தேதி தாயகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலவரம் செய்து தாயகத்தைஇழுத்து மூட திட்டமிட்டவர்களின் முயற்சி பல்லாயிரக்கணக்கில் கழகக் கண்மணிகள் திரண்டதால்கைவிடப்பட்டது
ஜனவ> 10ம் தேதியன்றும் காவல்துறையை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில்இருந்து செய்திகள் வந்துள்ளன. அண்ணா போற்றிப் பாதுகாத்த ஜனநாயக அறவழியில் எத்தகைய இடர்நேரிடினும் அவற்றை எதிர்கொள்வோம்.
குண்டர் கூட்டம் கலவரம் செய்ய முனையுமானால், காவல்துறையும், அதற்குத் துணை போனால் அதனால்ஏற்படும் மொத்த விளைவுக்கும் ஆளும் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications