நூலகர் மீது ஆஸ்திரிய பெண் பரபரப்பு புகார்
நாகர்கோவில்:ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தன்னை கல்யாணம் செய்துகொண்டு பின்னர் ரூ. 25 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக ஆஸ்திரிய நாட்டுப்பெண் ஒருவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவர் ரோஸ்டா ஜூடித். 43 வயதாகும் இவர் நேற்று பட்டுச் சேலையில், கழுத்தில்தாலியுடன் நாகர்கோவில் பத்திரிக்கையாளர் சங்க அலுவலகத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களுக்குப்பேட்டி அளித்தார்.
ஜூடித் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் ஆஸ்திரியாவில் நர்சாக பணியாற்றி வருகிறேன். அவ்வப்போதுநான் கேரளாவுக்கு வருவதுண்டு. அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர்.
அப்போது கோழிகோட்டைச் சேர்ந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டேன். பின்னர்கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டோம்.
இந்த நிலையில் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த நூலகர் ரவிச்சந்திரனுடன் எனக்கு இன்டர்நெட் மூலம்நட்பு ஏற்பட்டது. எனது மகள்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க அவரை ஆஸ்திரியாவுக்கு வரவழைத்தேன்.
அப்போது எனக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி 4ம்தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். தமிழ் முறைப்படியே திருமணம் நடந்தது.
கல்யாணத்தை தமிழகத்தில் முடித்து விட்டு சில மாதங்களில் இருவரும் ஆஸ்திரியா சென்றோம். பின்னர்ரவிச்சந்திரன் சில மாதங்களில் தமிழகம் திரும்பி விட்டார். ஆனால் அதன் பிறகு அவர் வரவில்லை.
ஆஸ்திரியாவில் அவருக்கு ஆசிரியர் வேலை வாங்கிக் கொடுத்தேன். இருவரும் சந்தோஷமாகத்தான்இருந்தோம். தம்பிக்குக் கல்யாணம் என்று கூறித்தான் தமிழகம் வந்தார் அவர். ஆனால் அதன் பிறகு திரும்பிவரவே இல்லை.
தமிழகம் வரும்போது 40 ஆயிரம் ஈரோ பணத்தையும் (இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சம்) உடன் எடுத்து வந்தார்.ஆனால் இங்கு வந்த பிறகு ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவர் மணந்து கொண்டதாக தெரிந்துகொண்டேன்.
எனது பணத்தை ரவிச்சந்திரன் திரும்பத் தர வேண்டும். இல்லாவிட்டால் என்னுடன் வந்து குடும்பம் நடத்தவேண்டும். நான் கட்டியுள்ள தாலி கூட எனது செலவில்தான் வாங்கினேன். நகைகளும் எனது பணத்தில்தான்வாங்கினேன். அவருக்காக நிறைய செலவு செய்துள்ளேன்.
என்னிடம் அவர் மிகவும் நட்பாக பழகினார் என்றுதான் நினைத்தேன். ஐரோப்பியர்களைப் போலவெளிப்படையாக பேசுகிறாரே, பழகுகிறாரே என்றுதான் அவரை மனப்பூர்வமாக காதலித்தேன். ஆனால் இப்படிமோசடி செய்வார் என எதிர்பார்க்கவில்லை.
இந்தப்பிரச்சினைக்கு முடிவு தெரியும் வரை நான் இங்கிருந்து போக மாட்டேன் என்றும் ஜூடித் கூறினார்.
இதுகுறித்து ரவிச்சந்திரனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், நான் ஜூடித்தை மோசடி செய்யவில்லை,ஏமாற்றவும் இல்லை. அவருடன் குடும்பம் நடத்த தயாராக உள்ளேன். நான் வேறு எந்தப் பெண்ணையும்கல்யாணம் செய்யவில்லை என்று கூறுகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications