மதிமுக ஒரு செத்த பாம்பு: ஆற்காடு காட்டம்!
சென்னை:மதிமுக ஒரு செத்த பாம்பு. அதை அடிக்க தடி தேவையில்லை என்று திமுகபொருளாளரும், மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி காட்டமாககூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை சீர்குலைக்க முதல்வர் கருணாநிதி முயல்வதாகவைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். சொந்தக் கட்சியினரிடமே தனது சாகசவித்தையைக் காட்டும் வைகோ, எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் அவர் மீதுகூறி வரும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிக்கத் திராணியிறி தனது பாய்ச்சலைதிமுக தலைவர் மீது காட்டி வருகிறார்.
மதிமுக ஒரு செத்த பாம்பு. அதை அடிக்க ஒரு தடி தேவையில்லை. திமுகவுக்கும்அப்படிப்பட்ட அவசியம் இல்லை. திமுக மீது குற்றம் சாட்டுவதன் மூலம் தன் மீதுள்ளகறைகளை மறைக்கப் பார்க்கிறார் வைகோ.
நிழலோடு சண்டை போடுவதைப் போல, மதிமுகவுக்கும் தன் தலைமைஅலுவலகத்திற்கும் ஏதோ ஆபத்து வந்து விட்டதைப் போல தன்னுடன் இருக்கும் ஒருசில தொண்டர்களை சூடேற்றிப் பார்த்தார் வைகோ.
பின்னர் மத்திய அரசே தலையிட்டு திமுக அரசினை எச்சரிக்கை செய்ததாக ஒருபொய்யைப் பரப்பினார். அந்தப் பொய்யை மறுத்து காங்கிரஸ் தலைமை அறிக்கைவெளியிட்ட பிறகு தனது பேச்சை வெளியிட்ட வாரப் பத்திரிக்கை தவறு செய்துவிட்டதாக பல்டி அடித்தார்.
வைகோவின் இந்த அநாகரீக பிரசாரத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்றுகூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.
வீடு திரும்பினார் ஸ்டாலின்-3 வாரம் ஓய்வு
இந் நிலையில் முதுகு வலி காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின்குணமடைந்து வீடு திரும்பினார். 3 வாரங்களுக்கு அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஸ்டாலினுக்கு சில தினங்களுக்கு முன் முதுகுப் பகுதியில் சதைப் பிடிப்பு ஏற்பட்டதால் கடும் முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்து ராமச்சந்திராமருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து ஸ்டாலின் வீடு திரும்பினார். ஓய்வில் இருப்பதால் 3 வாரங்களுக்கு ஸ்டாலினைப் பார்க்க வர வேண்டாம் என திமுகவினருக்குஅக்கட்சியின் பொருளாளர் ஆற்காடு வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications