ஓடையில் கவிழ்ந்த பேருந்து: பஸ்சுக்குள்புகுந்த பாம்புகள்-பயந்து அலறிய பயணிகள்!
பண்ருட்டி:பண்ருட்டி அருகே அரசு பேருந்து ஓடையில் கவிழ்ந்து விழுந்தது. இதையடுத்துதண்ணீரில் இருந்த பாம்புகள் பேருந்துக்குள் புகுந்ததால் அதில் சிக்கிக் கொண்டபயணிகள் பயந்து அலறியபடி வெளியே குதித்து தப்பினர்.
சென்னையிலிருந்து நெய்வேலிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து அதிகாலைசுமார் மூன்றரை மணியளவில் பண்ருட்டியை அடுத்த கண்டரக்கோட்டை என்றஇடத்தில் சென்றபோது எதிரே ஒரு லாரி மிக வேகமாக வந்தது.
லாரி மீது மோதி விடாமல் இருப்பதற்காக பேருந்து ஓட்டுனர் முகம்மது இலியாஸ்,சடன் பிரேக் போட்டார். அப்போது நிலைதடுமாறிய பஸ் அருகே இருந்த ஓடையில்கவிழ்ந்தது.
இதில் 30 பயணிகள் பஸ்ஸோடு ஓடைக்குள் விழுந்தனர். அந்த ஓடையில் ஏராளமானதண்ணீர் பாம்புகள் ஏராளமான இருந்தன. இந்த பாம்புகள் பேருந்து விழுந்தவேகத்தில் மேலே வந்தன. பஸ்சுக்குள் புகுந்து பயணிகளை உரசிச் சென்றன.
ஏற்கனவே பஸ் கவிழ்ந்த அதிர்ச்சியில் இருந்த பயணிகளை இந்த பாம்புகள் மேலும்பீதியேற்றவே பயணிகள் அலறினர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பேருந்தில் சிக்கிக் கொண்ட பயணிகளைமீட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications