அங்கன்வாடி: 20,000 பணிகளுக்கு ஆளெடுப்பு
சென்னைதமிழகம் முழுவதும் 20,000 ஆயிரம் சத்துணவு மற்றும் அங்கன்வாடிஅமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். கணவனால் கைவிடப்பட்டவர்கள்,விதவைளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் பால்வாடிகளில் (அங்கன்வாடி) 2.5லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இதில் 30,000 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில் சத்துணவு அமைப்பாளர், சமையல் வேலை செய்பவர்கள், உதவியாளர்கள்,அங்கன்வாடி அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களும் அடங்கும். இந்தஇடங்களுக்கு ஆட்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மாவட்ட வாரியாக தற்போது காலியிடங்களை நிரப்பும் பணியில் சமூக நலத்துறைஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக 10,000 பணியிடங்களுக்கு நேர்காணல்நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.
அடுத்த கட்டமாக மேலும் 20,000 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். இவர்களில் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு 1,527 பேரும்,சமையல் செய்யும் பணிக்கு 3,362 பேர், உதவியாளர்கள் 6,061 பேர் நேர்காணல்மூலம் தேர்வு செய்யப்படுவர்.
அங்கன்வாடி அமைப்பாளர்கள் பதவிக்கு 2,363 பேர் தேர்வு செய்யப்படுவர்.உதவியாளர் பணிக்கு 6,434 பேர் நியமிக்கப்படுவர். மொத்தமாக 19,745 பேர் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.
முன்பு இந்த வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்தஅதிமுக ஆட்சியில் பெண்களுக்காக இந்தப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.தற்போதைய திமுக ஆட்சியில் திருமணமான மற்றும் கணவனை இழந்த விதவைப்பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பத்தாவது படித்திருந்தால் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.சமையல் செய்பவர், உதவியாளர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.
அங்கன்வாடி அமைப்பாளர் பதவிக்கு பத்தாவது படித்திருக்க வேண்டும். 25 முதல் 35வயதுக்குள் இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டஅலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், நேர்முக தேர்வு நடத்தி தேர்வு செய்வர்.
சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் செய்பவர்கள், உதவியாளர்களை ஊராட்சிஒன்றிய ஆணையாளர், நகராட்சி ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்டஆட்சித் தலைவரின் சத்துணவுத் திட்ட நேர்முக உதவியாளர் ஆகியோர் நேர்காணல்நடத்தி தேர்வு செய்வர்.












Click it and Unblock the Notifications