11 பேர் கொலையிலும் சிபுசோரனுக்கு தொடர்பு
ஜமதாரா (ஜார்க்கண்ட்):தனது உதவியாளரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜார்கண்ட் முக்திமோர்ச்சா தலைவர் சிபுசோரன் இன்னொரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
உதவியாளர் சசிநாத் ஜா கொலை வழக்கில் சிக்கிய சிபுசோரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனைவிதித்தது. இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1975ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ஜமதாரா என்ற இடத்தில், சிர்ருத்என்ற இடத்தில் காவல் நிலையம் மீது ஒரு கும்பல் வன்முறை தாக்குதலை மேற்கொண்டது. இதில் 11 பேர்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் மற்றும் கொலை வழக்கில் மொத்தம் 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் சோரனும்ஒருவர். இந்த கொலை வழக்கு ஜமதாரா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து சிபு சோரன் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அருண்குமார் முன்ஆஜர்படுத்தப்பட்ட சோரனை, மறு உத்தரவு வரும் வரை ஜமதாராவில் உள்ள சிறையில் அடைக்க நீதிபதிஉத்தரவிட்டார்.
ஆனால் ஜமதாராவில் மத்திய சிறை இல்லை என்பதால் சோரனுை தும்கா மத்திய சிறைக்கு கொண்டு போய்போலீஸார் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை சோரன் இங்குதான் அடைக்கப்பட்டிருப்பார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications