உதவி போலீஸ் கமிஷ்னர் வீட்டில் புகுந்த திருடன்!
சென்னை:சென்னையில் உதவி காவல் ஆணையர் வீட்டிற்குள்ளேயே புகுந்துஅங்கிருந்தவர்களைத் தாக்கி துணிகர திருட்டில் ஈடுபட முயன்றவனை அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் வளைத்துப் பிடித்து சரமாரியாக அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற காவல் உதவி ஆணையராக இருப்பவர் அசோக். இவரது வீடுமைலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் தெருவில் உள்ளது.
அசோக்குடன் அவரது வயது முதிர்ந்த பெற்றோரும் உடன் வசித்து வருகின்றனர்.நேற்று மாலை 6 மணியளவில் அசோக் வீட்டு வேலைக்காரப் பெண் பால் வாங்கிக்கொண்டு வீட்டின் பின் பக்கமாக உள்ளே வந்துள்ளார்.
அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு நபர், வேலைக்காரப் பெண்ணைஉள்ளே தள்ளி விட்டு அவனும் நுழைந்தான். பின்னர் வீட்டுக் கதவைப் பூட்டினான்.
சத்தம் கேட்டு அங்கு வந்த அசோக்கின் தாயாரையும், வேலைக்காரப் பெண்ணையும்தாக்கி கீழே தள்ளிய அந்த நபர், வீட்டில் இருந்த இரண்டு சூட்கேஸ்களை எடுத்துக்கொண்ட ஓட முயன்றான்.
அப்போது வீட்டில் இருந்த அசோக்கின் தந்தை சுதாரித்துக் கொண்டு திருடனின்முகத்தில் குத்தினார். இதில் நிலை குலைந்த திருடன் கீழே விழுந்தான். அசோக்கின்தாயார் அதற்குள் முன்பக்கமாக வெளியே ஓடி திருடன் திருடன் என குரல்கொடுத்ததால் அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், கடைக்காரர்கள்,பொதுமக்கள் என பலரும் திரண்டனர்.
அத்தனை பேரும் சேர்ந்து வீட்டை முற்றுகையிட்டதால் திருடனால் தப்பமுடியவில்லை. வசமாக சிக்கிய திருடனை அனைவரும் சரமாரியாக அடித்துநையப்புடைத்தனர். அதற்குள் அசோக்கும் தகவல் அறிந்து விரைந்து வந்தார்.
பின்னர் திருடனை மைலாப்பூர் போலீஸார் வந்து பிடித்துச் சென்றனர். அந்த நபரின்பெயர் சண்முகம் என்பது தெரிய வந்துள்ளது.
சென்னை மாநகர காவல்துறை 150வது ஆண்டு விழாவை கொண்டாடி வரும்நிலையில், உதவி ஆணையரின் வீட்டிலேயே துணிகரமாக திருடன் புகுந்த சம்பவம்சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications