திருட்டு: ஏற்காடு ரயிலில் போலீஸ் ஸ்டேஷன்!
சென்னை:ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதால் திருடர்களைப் பிடிக்கரயிலிலேயே நடமாடும் காவல் நிலையம் அமைக்க ரயில்வே போலீஸ் முடிவு செய்துள்ளது.
சேலம் காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் நாம். இவர் நகைக் கடை நடத்தி வருகிறார். தனதுஉதவியாளர் ஸ்ரீதருடன் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர் நேற்று சென்னைக்கு வந்தார்.
அப்போது ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் வைத்திருந்த சூட்கேஸை சிலர் திருடிச் சென்றனர்.இதுகுறித்து ரயில்வே போலீஸில் பிரேம் புகார் கொடுத்தார்.
இதேபோல கடந்த நவம்பர் 8ம் தேதி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இந்த ரயிலில் பயணம் செய்தபோதுஅவரது உதவியாளர் வைத்திருந்த ரூ. 21,500 பணம் இருந்த பெட்டி திருட்டுப் போனது. அமைச்சரின்சூட்கேஸும் கூட அப்போது திருடப்பட்டது.
டிசம்பர் 4ம் தேதி சேலத்தைச் சேர்ந்த தர்மராஜன் என்பவரின் சூட்கேஸும் திருட்டுப் போனது. தொடர்ந்து இந்தரயிலில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பது தொடர்பாக ரயில்வே ஐஜி ராஜா, எஸ்.பி. ஆனி விஜயா ஆகியோர்இன்று அவசர ஆலோசனை நடத்தினர்.
திருட்டைத் தடுக்கவும், திருடர்களைப் பிடிக்கவும் ரயிலிலேயே ஒரு சப் இன்ஸ்பெக்டர், 4 போலீஸார் அடங்கியநடமாடும் காவல் நிலையத்தை அமைக்க அப்போது முடிவு செய்யப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications