சிறுமிகளைக் கொன்று தின்ற நொய்டா கொடூரரர்கள்
நொய்டா:உ.பி. மாநிலம் நொய்டாவில், சிறுவர், சிறுமிகளைக் கொடூரமாக கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ளமொஹீந்தர் சிங் மற்றும் சுரேந்தர் ஆகியோர், கொலை செய்த பின்னர் உடல் உறுப்புகளை தின்றதாக பகீர் தகவல்வெளியாகியுள்ளது.
டெல்லி அருகே நொய்டாவில் மொஹீந்தர் சிங் என்பவருக்குச் சொந்தமான பங்களாவில் சில நாட்களுக்கு முன்புஎலும்புக் குவியல் சிக்கியது. இதையடுத்து போலீஸார் அந்த பங்களா வளாகத்திலும், அருகே உள்ளசாக்கடையிலும் தோண்டிப் பார்த்தபோது குவியல் குவியலாக எலும்புக் கூடுகள் சிக்கின.
நிதாரி கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியரைக் கடத்தி கொலை செய்ததாக மொஹீந்தர்சிங்கும், அவரது வீட்டு வேலையாள் சுரேந்தரும் போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. தற்போது மொஹீந்தர் மற்றும் சுரேந்தருக்கு குஜராத் மாநிலம்அகமதாபாத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
நார்கோ அனாலிசிஸ் முறையில் நடத்தப்பட்ட விசாரணையில் சுரேந்தர் பல அதிர்ச்சித் தகவல்களைவெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை 10.15 மணிக்கு சுரேந்தருக்கு நார்கோ அனாலிசிஸ் சோதனைநடத்தப்பட்டது.
சுரேந்தரை அரை மயக்க நிலைக்குக் கொண்டு சென்று அவனிடம் பல கேள்விகளை போலீஸார் கேட்டனர்.அந்தக் கேள்விகள், அதற்கு சுரேந்தர் அளித்த பதில்கள் குறித்து போலீஸார் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் படு பயங்கரமான தகவல்களை சுரேந்தர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுரேந்தர் தெரிவித்ததகவல்களாக கூறப்படுபவை:
கடத்தப்படும் சிறுமிகளை மொஹீந்தர் முதலில் கற்பழிப்பாராம். பின்னர் சுரேந்தர் கற்பழிப்பானாம். அதன்பின்னர் அவர்களை கொன்று விடுவார்களாம். பின்னர் உடலை பல கூறுகளாக வெட்டி விடுவார்களாம்.
உடலை பல கூறுகளாக வெட்டிய பின்னர் உடல் உறுப்புகளை சுரேந்தர் தின்பது வழக்கமாம். கல்லீரல்சாப்பிட்டால் உடல் சூடு தணியும் என்று கேள்விப்பட்டு சிறுமிகளின் உடல்களில் இருந்த கல்லீரல் அத்தனையுயம்சாப்பிட்டு விட்டதாக சுரேந்தர் கூறியுள்ளான். இதுதவிர உடலையும் பல துண்டுகளாக வெட்டிசாப்பிட்டுள்ளானாம்.
இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளைபரிசோதனை செய்த டாக்டர்கள், மருத்தவர்களைக் கொண்டு உடல்களை மிகவும் நேர்த்தியாக, துண்டு துண்டாகவெட்டியுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த விவகாரத்தில் சில டாக்டர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் உறுதியாகநம்புகிறார்கள். இன்னும் சில நாட்களுக்கு இருவருக்கும் நார்கோ அனாலிசிஸ், பிரையின் மேப்பிங் உள்ளிட்டசோதனைகள் நடைபெறவுள்ளன.
பாலியல் கொலைகள்-பணிந்தார் முலாயம்
இதற்கிடையில் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் சிறுமிகள் கற்பழித்துக் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நொய்டாவில் சிறுமிகள் கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உ.பி.மாநில போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால் இதில் ஆளும் கட்சியினருக்கும் உடல் உறுப்புகளை விற்கும்கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் உள்ளதால் உடனடியாக இந்த விவகாரத்தைசிபிஐயிடம் ஒப்படைக்கவேண்டும் என காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்திவந்தன.
ஆனால், இந்தக் கோரிக்கையை நிராகரித்த உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ் நிராகரித்து வந்தார். இந்நிலையில் மாநில ஆளுநரும் சிபிஐ விசாரணையே சிறந்தது எனறு கூறி முலாயமுக்கு கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து எதிர்ப்புகளுக்குப் பணிந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் முலாயம்.
இந்த வழக்கு தவிர சமீபத்தில் அரசியல்வாதிகளை வீடியோவில் படமெடுத்த பிளாக் மெயில் செய்தவிவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியை கவிதா தேவி செளத்ரி வழக்கும் சிபிஐ வசம்ஒப்படைக்கப்படுவதாக முலாயம் சிங் கூறியுள்ளார். கவிதாவோடு செக்ஸ் உறவு வைத்திருந்த 3 உபிஅமைச்சர்கள் ராஜினாமா செய்ய நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மொஹீந்தர் மற்றும் சுரேந்தர் ஆகியோருக்கு குஜராத் மாநிலம் காந்தி நகரில் உண்மை கண்டறியும்சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுதவிர பிரெயின் மேப்பிங் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications