3 பேரைக் கொன்று புதைத்த கொள்ளையன்!
கடலூர்:கடலூர் அருகே சேத்தியாத்தோப்பு பகுதியில் தனக்கு இடையூறாக இருந்த 3 பேரை கொலை செய்து அவர்களைஒரே குழியில் புதைத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் அனுக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். சமீபத்தில் சேத்தியாத்தோப்பில் நடந்தகொள்ளைச் சம்பவம் தொடர்பாக விமல்ராஜை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியபோது தான் 3 கொலைகள்செய்துள்ளதாக திடுக்கிடும் தகவலைக் கூறினார் விமல்ராஜ். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அதுகுறித்துவிமல்ராஜிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து ஆனந்தன், தமிழரசன், திருஞானம் ஆகிய 3 பேரைக் கொலை செய்து ஒரே குழியில்அவர்களைப் புதைத்து விட்டதாக விமல்ராஜ் தெரிவித்தார். அனுக்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு கரும்புத்தோட்டத்தில் அவர்களது உடல்களைப் புதைத்துள்ளதாகவும் விமல்ராஜ் கூறினார்.
இதையடுத்து விமல்ராஜை அந்த இடத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்று அடையாளம் காட்டக் கூறினர்.அவரும் அடையாளம் காட்டினார். அதே பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளையும் குழி தோண்டிப்புதைத்திருந்தார் விமல்ராஜ்.
விமல்ராஜ் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. திருஞானமும் விமல்ராஜும் நெருங்கிய நண்பர்கள்.திருஞானத்தின் நெருங்கிய நண்பர்கள் ஆனந்தன், தமிழரசன்.
விமல்ராஜ் ஒரு திருடன் என்பது திருஞானத்திற்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவ்வப்போது அவர்விமல்ராஜை மிரட்டி வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் திருஞானம் மூலம் மற்ற இருவருக்கும் விமல்ராஜ்குறித்துத் தெரிய வந்துள்ளது. அவர்களும் விமல்ராஜை அவ்வப்போது மிரட்டி வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த விமல்ராஜ், 3 பேரையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்தாராம். இதைத் தொடர்ந்த 3பேரையும் கொலை செய்து ஒரே குழியில் வைத்து அவர்களைப் புதைத்துள்ளார் விமல்ராஜ்.
இந்த மூன்று பேரும் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி புதுச்சேரிக்குப் போவதாக தங்களது வீடுகளில் கூறி விட்டுமோட்டார் சைக்கிளில் கிளம்பியுள்ளனர். அதற்குப் பிறகு அவர்களைக் காணவில்லை. எனவே ஆகஸ்ட் 24ம்தேதியே மூன்று பேரையும் விமல்ராஜ் தீர்த்துக் கட்டியிருக்கக் கூடும் என போலீஸார் கருதுகின்றனர்.
3 பேரும் காணாமல் போனது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே ஹேபியஸ் கார்பஸ் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 3 பேரையும் கண்டுபிடித்துஆஜர்படுத்துமாறு கடலூர் மாவட்ட எஸ்முபி, பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு ஏற்கனவேஉத்தரவிட்டுள்ளது.
காணாமல் போன 3 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டு ஒரே குழியில் புதைக்கப்பட்ட சம்பவம் அனுக்கம்பட்டுகிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து போலீஸாரைக் கண்டித்து கடலூர்-நெய்வேலி சாலையில் சாலை மறியலில் பொதுமக்கள் இறங்கினர்.அவர்களை போலீஸாரும், ஆர்.டி.ஓ.வும் சமாதானப்படுத்தியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இன்று 3 பேரின் உடல்களையும் தோண்டியெடுக்க போலீஸார் திட்டமிட்டள்ளனர். ஆர்.டி.ஓ. பிருந்தாதேவிமுன்னிலையில் பிணங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளன.
இதற்கிடையே, சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, அனுக்கம்பட்டு, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்காணாமல் போன பலரும் கூட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்துகடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதிகளில் காணாமல் போனவர்கள் பட்டியலை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
டெல்லி அருகே சிறார்களை கொன்று குவித்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,கடலூர் அருகே கொள்ளைச் செயலுக்கு இடையூறாக இருந்த 3 பேரைக் கொன்று ஒரே குழியில் புதைத்த சம்பவம்பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications