தீவிரவாதிகள் தாக்குதலில் 56 பீகாரிகள் பலி
குவஹாத்தி:கிழக்கு அஸ்ஸாமில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் குறி வைத்து உல்ஃபா (ஐக்கிய அஸ்ஸாம் மீட்புமுன்னணி) தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலில் 56 பேர் பலியாயினர்.
அஸ்ஸாமின் பல பகுதிகளில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தங்கி கூலி வேலை பார்த்துவருகின்றனர். கிழக்கு அஸ்ஸாமில்தான் இவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களை அஸ்ஸாமிலிருந்துவெளியேறுமாறு உல்ஃபா தீவிரவாதிகள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர்.
இந்த நிலையில், கிழக்கு அஸ்ஸாமில் உள்ள தின்சுகியா, திப்ரூகர், தேமாஜி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமைஇரவு முதல் உல்ஃபா தீவிரவாதிகள் பீகார் மாநிலத்தவர்களைக் குறி வைத்து தாக்குதலில் இறங்கினர்.
இந்த தொடர் தாக்குதலில் 56 பேர் உயிரிழந்தனர். தின்சுகியா மாவட்டத்தில் 6 இடங்களில் தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தினர். திப்ரூகரில் 2 இடங்களிலும், தேமாஜியில் ஒரு இடத்திலும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில்ஈடுபட்டனர்.
தின்சுகியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 34 பேர் உயிரிழந்தனர். திப்ரூகரில் எட்டு பேரும்,தேமாஜியில் 6 பேரும் உயிரிழந்தனர். சில இடங்களில் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திப்ரூகரில் உள்ள அஸ்ஸாம்மருத்துவக் கல்லூதி அவசர சிகிச்சைப் பிதிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதத் தாக்குதலுக்கு அஸ்ஸாம் அரசு கடும் கண்டனம் தெதிவித்துள்ளது. தீவிரவாதிகளால்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசுஅறிவித்துள்ளது.
வட மாநிலங்களில் உஷார் நிலை:
அஸ்ஸாம் தீவிரவாதத் தாக்குதல் குறித்து பீகார் அரசு அதிர்ச்சி தெரிவித்துள்ளது. தாக்குதலில் இறந்த பீகாரைச்சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அமைச்சர்கள் கொண்ட குழுவும் அஸ்ஸாம் விரைந்தது. அஸ்ஸாமில் வசிக்கும் பீகார் மக்களின் பாதுகாப்புகுறித்து அஸ்ஸாம் மாநில அரசுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறுகையில் இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. மிகவும்அதிர்ச்சிகரமானது. அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாயுடன் பேசியுள்ளேன். பீகார் மாநில மக்களுக்கு உரியபாதுகாப்பு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
பீகாரிலிருந்து அஸ்ஸாமுக்குச் செல்லும் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுஎன்றார்.
பீகாரிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து பீகாரின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இந்தி பேசுபவர்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதகல் நடந்துள்ளதால் வட மாநிலங்களில் கடும் அதிர்ச்சிநிலவுகிறது. இம்மாநிலங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அதிர்ச்சி, கண்டனம்:
அஸ்ஸாம் தீவிரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அதிர்ச்சியும், கடும் கண்டனமும்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமரின் செய்தி ஆலோசகர் சஞ்சய் பரூவா கூறுகையில், இது மிகவும் கோழைத்தனமான,மனிதாபிமானமில்லாத ஒரு செயல், மக்கள் விரோதமானது என்று பிரதமர் கருத்து தெரிவித்துள்ளதாக கூறினார்.
மத்திய குழு விரைகிறது:
அஸ்ஸாம் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால்தலைமையிலான உயர் நிலைக்குழு இன்று குவஹாத்தி செல்கிறது.
பீகார், மேற்கு வங்க மாநிலங்களில் கலவரம் மூண்டு விடாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications