ஈரானில் அணுகுண்டு வீச இஸ்ரேல் திட்டம்?
லண்டன்:ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் நிலைகளை அணு ஆயுதங்களை கொண்டு தாக்கிஅழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக லண்டனின் சண்டே டைம்ஸ் இதழ் செய்திவெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவ தகவல்களை மேற்கோள் காட்டி சண்டே டைமஸ் வெளியிட்டுள்ளசெய்தி:
ஈரானின் நடான்ஸ் என்ற இடத்தில் உள்ள அணு ஆயுத நிலையை தாக்கி அழிக்கஇரண்டு விமானப்படை பிரிவுகளுக்கு இஸ்ரேல் தீவிர பயிற்சி அளித்து வருகிறது.
இந்த இடம் தவிர அரக் என்ற இடத்தில் உள்ள கன நீர் தயாரிப்புப் பிரிவு, இஸ்பகான்என்ற இடத்தில் உள்ள யுரேனியம் மாற்று உலை ஆகியவற்றையும் தாக்கி அழிக்கஇஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. சாதாரண வகை அணு குண்டுகளை வீசி இவற்றை தாக்கஇஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவிக்கிறது.
யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை ஈரான் நிறுத்த மறுத்ததால், கடந்த மாதம்தான்ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு சபை தடையை அறிவித்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் ஈரானைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக செய்திவெளியாகியுள்ளது. கடந்த 1981ம் ஆண்டு ஈராக்கில் உள்ள அணு உலையைஇஸ்ரேல் படைகள் தாக்கி அழித்தன. அதேபோல இப்போது ஈரான் மீது தாக்குதல்நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இஸ்ரேல் நினைப்பது போல ஈரானின் பலம், வலு குறைந்த ஒன்றல்ல,ஈராக்கைப் போல ஈரானை அவ்வளவு எளிதில் தாக்க முடியாது என்று நிபுணர்கள்கூறுகின்றனர்.
சண்டே டைம்ஸ் செய்தி குறித்து இஸ்ரேல் அரசு செய்தித் தொடர்பாளர் மிரி எய்ஸின்கூறுகையில், இதுபோன்ற செய்திகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் தர விரும்பவில்லைஎன்றார்.
ஆனால், இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் உலகம் முழுமைக்கும் உரியபாடத்தை ஈரான் கற்பிக்கும் என ஈரான் வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் முகம்மதுஅலி ஹூசைனி எச்சரித்துள்ளார்.
அவர் இதுகுறித்துக் கூறுகையில், உலக அமைதிக்கும், இப்பிராந்தியத்திற்கும் மிகப்பெரிய மிரட்டல், எதிரி இஸ்ரேல்தான் என்பதை நாங்கள் உலகுக்கு நிரூபிப்போம்.
ஈரான் மீதான எந்தத் தாக்குதலையும், ஊடுறுவலையும் சமாளிக்க ஈரான் தயாராகஉள்ளது. அப்படிப்பட்ட செயலை செய்பவர்கள் அதற்காக பெரிய விலையைகொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.
ஏற்கனவே இஸ்ரேல் என்ற நாடே உலக வரைபடத்தில் இல்லாமல் செய்வோம் எனஈரான் அதிபர் மகமூத் அகமதியாஜேத் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications